தமிழ்

பெண் : கேள்வியின் நாயகனே ஏ

பெண் : கேள்வியின் நாயகனே ஏ

இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

கேள்வியின் நாயகனே ஏ

இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண் : இல்லாத மேடை ஒன்றில்

எழுதாத நாடகத்தை

எல்லோரும் நடிக்கின்றோம்

நாமே எல்லோரும் பார்க்கின்றோம்

எல்லோரும் நடிக்கின்றோம்

நாமே எல்லோரும் பார்க்கின்றோம்

பெண் : கேள்வியின் நாயகனே

இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண் : பசுவிடம் கன்று வந்து

பால் அருந்தும்

கன்று பால் அருந்தும் போதா

காளை வரும்

பசுவிடம் கன்று வந்து

பால் அருந்தும்

கன்று பால் அருந்தும் போதா

காளை வரும்

பெண் : சிலரது வாத்தியத்தில்

இரண்டு பக்கம்

பெண் : சிலரது வாத்தியத்தில்

இரண்டு பக்கம்

கொஞ்சம் சிந்தை செய்தால்

உனக்கு பிறக்கும் வெட்கம்

தாலிக்கு மேலும் ஒரு

தாலி உண்டா

வேலிக்கு இன்னொருவன்

வேலி உண்டா

கதை எப்படி

அதன் முடிவெப்படி

கதை எப்படி

அதன் முடிவெப்படி

பெண் : கேள்வியின் நாயகனே

இந்தக் கேள்விக்கு

பதில் ஏதய்யா

பெண் : தலைவன் திருச்சானூர்

வந்துவிட்டான்

மங்கை தரும தரிசனத்தை

தேடுகின்றான்

தேடுகின்றான்

தேடுகின்றான்

தேடுகின்றான்

பெண் : தலைவன் திருச்சானூர்

வந்துவிட்டான்

மங்கை தரும தரிசனத்தை

தேடுகின்றான்

அலமேலு அவன் முகத்தை

காண்பாளோ

மங்கை அவனோடு திருமலைக்குச்

செல்வாளோ

செல்வாளோ

செல்வாளோ

பெண் : கேள்வியின் நாயகனே

இந்தக் கேள்விக்கு

பெண் : கேள்வியின் நாயகனே

இந்தக் கேள்விக்கு

பெண்: பதில் ஏதய்யா

கேள்வியின் நாயகனே

இந்தக் கேள்விக்கு

பதில் ஏதய்யா

பெண் : ஒரு கண்ணும்

மறு கண்ணும்

பார்த்துக்கொண்டால்

பெண் : பார்த்துக் கொண்டால்

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும்

பார்த்துக் கொண்டால்

அவை ஒன்றோடு ஒன்று

சொல்லும் சேதி என்ன

பெண் : இரு கண்ணும்

ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்

இரு கண்ணும்

ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்

அவை இரண்டுக்கும்

பார்வையிலே பேதம் என்ன

அவை இரண்டுக்கும்

பார்வையிலே பேதம் என்ன

பெண் : பேதம் மறைந்ததென்று

கூறு கண்ணே

பெண் : நமது பேதம் தனை மறந்து

நடக்கும் முன்னே

பெண் : பேதம் மறைந்ததென்று

கூறு கண்ணே

பெண் : நமது பேதம் தனை மறந்து

நடக்கும் முன்னே

பெண் : கண்ணே உன் காலம் சென்ற

கதை என்ன

பெண் : உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்

வேறு என்ன

பெண் : கண்ணே உன் காலம்

சென்ற கதை என்ன

பெண் :உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்

வேறு என்ன

பெண் : உடல் எப்படி

பெண் : ஒன்றில் இருந்தாற்படி

பெண் : மனம் எப்படி

பெண் : நீ விரும்பும் படி

பெண் : கேள்வியின் நாயகியே

இந்தக் கேள்விக்கு

பதில் ஏதம்மா

பெண் இருவர் : இல்லாத மேடை ஒன்றில்

எழுதாத நாடகத்தை

எல்லோரும் நடிக்கின்றோம்

நாமே எல்லோரும் பார்க்கின்றோம்

பெண் : பழனி மலையிலுள்ள

வேல் முருகா

சிவன் பல்லாண்டு

ஏங்கி விட்டான் வா முருகா

பழனி மலையிலுள்ள

வேல் முருகா

சிவன் பல்லாண்டு

ஏங்கி விட்டான் வா முருகா

பெண் : பிடிவாதம் தன்னை விடு

பெரு முருகா

கொஞ்சம் பிரியத்துடன்

பக்கத் திரு முருகா

பெண் : பிடிவாதம் தன்னை விடு

பெரு முருகா

கொஞ்சம் பிரியத்துடன்

பக்கத் திரு முருகா

பிரியத்துடன்

பக்கத் திரு முருகா

திரு முருகா

திரு முருகா

Song information

படம்: அபூர்வ ராகங்கள் (1975)

பாடியவர்கள்: வாணி ஜெயராம் & பி.எஸ்.சசிரேகா

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

Album: அபூர்வ ராகங்கள்

Explore this song