தமிழ்

கொம்பாரி வேட்ட புலி பாரு

அது கூத்தாட போன கதை கேளு

வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு

அட ஆட்டுக்கு ஏது புலி வாலு

தினம் நெல்லறுக்கும் ஆச்சி

பசி உண்ணும் கதை போல

அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள

பதுங்கிப் போனான்

ஒரு பேரழக பாக்க

அவன் கேட்டதெல்லாம் நோக்க

அவன் தோலா போன மண்ணுக்குள்ள

தயங்கி போனான்

ஒய்யார தூண்டிலொன்னு காணு

வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு

துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு

ஒரு பெண் மான தேடி வந்த ஆணு

அட ஒட்டட தட்ட போனா

அது கொத்துற சர்ப மாச்சு

ஏன் ஒத்தடம் குத்த பச்சல வச்சா

குத்துற நஞ்சாச்சு

ஏன் சக்கர நக்க நிக்கிற

வண்டு சட்டினி ஆயாச்சு

புலி தொடும் காடிப்ப

ஒரு இடுகாடாச்சு

புது வரலாற புயலாறு

குறி வச்சாச்சு

கொம்பாரி வேட்ட புலி பாரு

அது கூத்தாட போன கதை கேளு

வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு

ஒரு பெண் மான தேடி வந்த ஆணு

வெளக்கு ஒளிய பாக்க

அவன் வளஞ்சு ஒளிஞ்சு போனான்

ஒரு வெளிச்ச நிலவு

பரிச கொடுக்க இறங்கி வந்தாளே

இடுப்பு அசையும் தேரு

தங்கம் தெளிச்ச கலச மாறு

அவ சிரிச்சா வெளிச்சம்

சீமை கடந்தும் கெடச்சுருக்காமே

வனப்புல பேயா நின்னா

மனசுல ஆத்தா தானா

உசுருல ஒரழகி சாராய

நீராக சேந்துப்புட்ட

கொம்பாரி வேட்ட புலி பாரு

அது கூத்தாட போன கதை கேளு

தினம் நெல்லறுக்கும் ஆச்சி

பசி உன்னும் கதை போல

அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள

பதுங்கி போனான்

ஒய்யார தூண்டிலொன்னு காணு

வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு

துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு

ஒரு பெண் மான தேடி வந்த ஆணு

Song information

படம்: கேப்டன் மில்லர் (2024)

பாடியவர்: தீ

இசை: ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர்: உமா தேவி

Album: கேப்டன் மில்லர்

Explore this song