தமிழ்
ஆண் : ஒத்த ரூவாயும் தாரேன் ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன் நீ ஒத்துக்கிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம் பெண் : ஒத்த ரூவாயும் வேணா உன் ஒனப்பத் தட்டும் வேணா ஒத்துக்கிற மாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமோய் ஆண் : ஏய் பத்து ரூவாயும் தாரேன் ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன் பச்சக் கிளி வாடி மெல்ல படப்பு பக்கம் போவோம் பெண் : ஏய் பத்து ரூவாயும் வேணா உன் பதிக்கஞ்சங்கிலி வேணா பசப்பி நிக்கிற மாமா என்ன உசுப்பி விட வேணா ஆண் : நா மச்சு வீடும் தாரேன் பஞ்சு மெத்த போட்டு தாரேன் மத்தியான நேரம் வாடி மாந்தோப்புக்கு போவோம் பெண் : அட மச்சு வீடும் வேணாம் உன் பஞ்சு மெத்தையும் வேணாம் மல்லுக்கு நிக்கிற மாமா உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன் ஆண் : ஹே நஞ்சை புஞ்சையும் தாரேன் நாலு தோட்டம் எழுதி தாரேன் தண்ணிக்கு போறது போல கண்ணே கொளத்து பக்கம் வாடி பெண் : உன் நஞ்சை புஞ்சையும் வேணாம் நாலு தோட்டம் தொறவும் வேணாம் கணக்கு பண்ணுற மாமா உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன் ஆண் : ஏய் சொத்து பூரா தாரேன் சாவிக் கொத்தும் கையில தாரேன் பத்தர மணிக்கு மேலே நீ வெத்தல காட்டுக்கு வாடி பெண் : ஓன் சொத்து சொகம் வேணா என் புத்தி கெட்ட மாமா மஞ்சத் தாலி போதும் ஓம் மடியில நான் வாரேன்
Song information
படம்: நாட்டுப்புறப் பாட்டு (1996)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கஸ்தூரி ராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, தேவி நீத்தியார்
Album: நாட்டுப்புறப் பாட்டு
Explore this song
- Singer: அருண்மொழி
- Singer: தேவி நீத்தியார்
- Film / album: நாட்டுப்புறப் பாட்டு
- Composer: இளையராஜா
- Lyricist: கஸ்தூரி ராஜா
- Actor: சிவக்குமார்
- Actor: செல்வா
- Actor: குஷ்பு
- Actor: மனோரமா
- Actor: கவுண்டமணி
- Actor: செந்தில்
- Actor: வினு சக்கரவர்த்தி
- Actor: குமரி முத்து
- Actor: பிரேம்குமார்
- Actor: அனுஷா
- Actor: அபிராமி
- Actor: சார்லி
- Actor: ஜெய்கணேஷ்
- Actor: சண்முகசுந்தரம்
- Actor: இடிச்சபுளி செல்வராஜ்
- Actor: கருப்பு சுப்பையா
- Actor: பெரிய கருப்பு தேவர்
- Actor: தேனி குஞ்சரம்மா