தமிழ்
ஆண் : இது என்ன கண்ணில் தாவுது ஒரு மான் இங்கு இதமொன்று நெஞ்சில் காயுது அது ஏன் இங்கு சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள் ஆண் : ஏக்கங்கள் நான் கொள்ள தாக்கங்கள்தான் இன்று சந்திக்கிறேன் தூக்கங்கள் ஏன் இல்லை நேற்று வரை என்று சிந்திக்கிறேன் ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள் ஆண் : பாலை நிலமென வாடுமா பாவை எனது ஆகுமா பாத நினைவுகள் ஆறுமா பாதை இனி வீணாகுமா நாளை என்னாகும் ஏதும் சொல்லாதோ போராகுமா ஆண் : நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொஞ்சி கொஞ்சி என் மனதை கொத்துகிறாள் ஆண் : ம்ம்ம் விதை ஒன்று நெஞ்சில் வீசியதொரு மான் அன்று தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் இன்று பொங்கி வந்து என் உயிரில் தாங்குகிறாள் ஆஆஆ
Song information
படம்: முண்டாசுப்பட்டி (2014)
இசை: சீன் ரோல்டன்
பாடலாசிரியர்: முத்தமிழ்
பாடியவர்கள்: ஹரிசரண் & கல்யாணி நாயர்
Album: முண்டாசுப்பட்டி
Explore this song
- Singer: ஹரிசரண் & கல்யாணி நாயர்
- Film / album: முண்டாசுப்பட்டி
- Composer: சீன் ரோல்டன்
- Lyricist: முத்தமிழ்
- Actor: விஷ்ணு விஷால்
- Actor: நந்திதா
- Actor: ஆனந்தராஜ்
- Actor: காளி வெங்கட்
- Actor: ராம்தாஸ்
- Actor: ‘லொள்ளு சபா’ மனோகர்