தமிழ்
அதிசய ராகம் ஆனந்த ராகம் ம்ம்ம் அழகிய ராகம் ம்ம்ம் அபூர்வ ராகம் அதிசய ராகம் ஆனந்த ராகம் ம்ம்ம் அழகிய ராகம் ம்ம்ம் அபூர்வ ராகம் அதிசய ராகம் வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் மோகம் ம்ம்ம் மோகம் வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இந்திர லோகத்து சக்கரவாகம் அதிசய ராகம் ஆனந்த ராகம் ம்ம்ம் அழகிய ராகம் ம்ம்ம் அபூர்வ ராகம் பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையின் இலக்கணம் அவளது தேகம் பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையின் இலக்கணம் அவளது தேகம் தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் அது என் யோகம் ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி இன்னுமா புரியல ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி அவளொரு பைரவி அவளொரு பைரவி அதிசய ராகம் ஆனந்த ராகம் ம்ம்ம் அழகிய ராகம் ம்ம்ம் அபூர்வ ராகம்
Song information
படம்: அபூர்வ ராகங்கள் (1975)
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
Album: அபூர்வ ராகங்கள்
Explore this song
- Film / album: அபூர்வ ராகங்கள்
- Composer: எம்.எஸ். விஸ்வநாதன்
- Lyricist: கண்ணதாசன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: சுந்தரராஜன்
- Actor: ஸ்ரீவித்யா
- Actor: ஜெயசுதா
- Actor: நாகேஷ்
- Actor: ரஜினிகாந்த்
- Actor: திடீர் கன்னையா