தமிழ்

அடங்குற நிலை இல்ல

அடக்கி வைக்க உரம் இல்ல

எதுக்குற மனசோட

எரிச்சு விடு பார்வையால

அடங்குற நிலை இல்ல

அடக்கி வைக்க உரம் இல்ல

எதுக்குற மனசோட

எரிச்சு விடு பார்வையால

தொடங்குற வரும்காலம்

தெரிஞ்சுகிட்டும் உன் பேர

தயங்குற மனசு எல்லாம்

தாண்டி வரும் நீ கூற

பயணமும் முடியாது

பயந்த மனம் சிரிக்காது

தடைகள உடைக்காம

தக்க பாதை கெடைக்காது

முடிஞ்சது முடிஞ்சு போச்சு

முக்தி எல்லாம் அடஞ்சு போச்சு

எனக்கு ஒரு எதிரி இங்க

என்ன தவிர வேறாரு

வஞ்சிக்கிற மனிதர்களை

கெஞ்ச விடும் தனியனடா

சிந்தனையில் கடவுளடா

செயல்கள் அனைத்தும் சாத்தான்டா

அஞ்சுகிற ஆளு இல்லடா

அரவம் அலறும் தீதான்டா

பஞ்சணையில் பதுங்கியவன்

விதியை முடிக்கும் நீதியடா

எட்டு திசை முழக்கமடா

இறைவன் குணமே வழக்கமடா

கொள்ளைகார கொடுமைகளை

கொள்ளி போடும் அரக்கனடா

எட்டு திசை முழக்கமடா

இறைவன் குணமே வழக்கமடா

கொள்ளைகார கொடுமைகளை

கொள்ளி போடும் அசுரனடா

Song information

படம்: கேப்டன் மில்லர் (2024)

பாடியவர்: அருண்ராஜா காமராஜ்

இசை: ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர்: அருண்ராஜா காமராஜ்

Album: கேப்டன் மில்லர்

Explore this song