தமிழ்
குழு : சின்ன மொட்டு ஒன்னு பூத்து இப்பம் வெட்கப்படும் ஜோரு வண்ண பொட்டு வச்சி பூவும் வச்சி நிக்கிறத பாரு குழு : வாழை மர தோரணமா வாச நடை பாதைங்க சீர் வரிசை ஊர்வலமா சொந்த பந்தம் சேருங்க குழு : கூடி வாங்க பொண்ணுகளே கொலவய போட்டு ஆடுங்க மாடி வீடு கட்டித்தரும் மாப்பிள்ள வேணுன்னு கேளுங்க பெண் : பளபளப்பும் கூடிச்சா மினுமினுப்பும் ஏறிச்சா கண்ணாடியில் உன்ன நீயும் பாக்கிறப்போ தோனிச்சா பெண் : பத்திரமா இருந்துக்க பக்குவமா நடந்துக்க கண்ட கண்ணும் பட்டா தப்பு கண்மணியே ஏத்துக்க கண்ணத்துல பூத்துக்க பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி பெண் : ஊராடுற வாய கொஞ்சம் உள்ள பூட்டி வையி வாலாட்டுற வேலையெல்லாம் வேணா தள்ளி வையி பெண் : காலாடுற கொலுசுக்குத்தான் பூத்த கத சொல்லு மேலாடுற சட்ட துணிய லூசா தைக்க சொல்லு பெண் : ஆகமொத்தம் நீயும் இப்போ பொம்பள தான் கேளு பொத்தி வெச்சு பாத்துக்கம்மா மோசமான ஊரு பெண் : இஷ்டத்துக்கு ஊற சுத்த கூடாதடி ரோசு
சத்தம் போட்டு பேசாதடி மெள்ளமா நீ பேசு பெண் : ஏ அடியாத்தி அடியாத்தி வலையலு குலுங்குற ஓசை வானத்தை எட்டும் தான் தாவணி போடுற ஆசை நாணத்தக் கூட்டும் தான் ஆண் : பூவே உன்ன பாக்குறப்போ போகுதம்மா நெஞ்சு தாயும் வந்து பாத்திடத் தான் ஏங்குதம்மா கண்ணு ஆண் : சாத்திரத்த சொல்லி உன்ன பூட்டி வைக்கும் ஊரு ஏத்துக்காத பெண்ணே நீயும் எதித்து கேள்வி கேளு ஆண் & குழு : உண்மையிலே பெண்ணினந்தான் படைக்கிற கடவுள் ஆணக் கூட பொம்பளதான் சுமக்கணும் கருவில் ஆண் & குழு : தீட்டு என்று தள்ளி வைக்கும் வேலையத்த ஊரு சாத்திரத்த கொள்ளி வச்சி உன் வேலைய பாரு பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி பெண் : பளபளப்பும் கூடிச்சா மினுமினுப்பும் ஏறிச்சா கண்ணாடியில் உன்ன நீயும் பாக்கிறப்போ தோனிச்சா பெண் : பத்திரமா இருந்துக்க பக்குவமா நடந்துக்க கண்ட கண்ணும் பட்டா தப்பு கண்மணியே ஏத்துக்க கண்ணத்துல பூத்துக்க பெண் : கெண்டை காலு கெளுத்தி கொண்ட போட்ட கொழுந்தி உலகத்து பேரழகா உன்ன பெத்த ஒருத்தி பெண் : அடியாத்தி அடியாத்தி யே... அடியாத்தி அடியாத்தி
Song information
படம்: சைரன் 108 (2024)
பாடியவர்கள்: அந்தோணி தாசன், சிந்தூரி விஷால்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: முருகன் மந்திரம்
Album: சைரன் 108
Explore this song
- Singer: அந்தோணி தாசன்
- Singer: சிந்தூரி விஷால்
- Film / album: சைரன் 108
- Composer: ஜி.வி. பிரகாஷ் குமார்
- Lyricist: முருகன் மந்திரம்
- Actor: ஜெயம் ரவி
- Actor: கீர்த்தி சுரேஷ்
- Actor: அனுபமா பரமேஸ்வரன்
- Actor: சமுத்திரகனி
- Actor: யோகி பாபு
- Actor: அழகம் பெருமாள்