Roman script
Singers : L. R. Eswari and P. B. Srinivas Music by : M. S. Vishwanathan Male Part Yaarodum pesa koodaadhu Female : Aagattum Male : Kettaalum solla koodaadhu Female : Aagattum Female Part Nee mattum maara koodaadhu Male : Aagattum Female : Verondrai naada koodaadhu Male : Aagattum Female Part Ullathil illaadhadhu Sollukko varaadhadhu Ennendru orae murai sollalaamaa Male Part Kannathilaa udal vannathilaa Kannathilaa udal vannathilaa Maangani oorum sevvaayin kinnathilaa Female Part Aa haahahaa Male Part Muthu pol undaavadhu Mullai poo sendaavadhu Innum naan sollaadhadhai sollalaamaa Female Part Sollungalaen pennai vellungalaen Sollungalaen pennai vellungalaen Vanna tholodu thol saera nillungalaen Female Part Bakthikkum illaadhadhu Mukthikkum vidaadhadhu Thithikkum adhaa idhu enna inbam Male Part Inbam varum adhu innum varum Inbam varum adhu innum varum Konjam naalaaga naalaaga sorgam varum Female Part Hmm hmm hmmm… Male Part Mandrathil vizhaa varum Manjathil nilaa varum Endraikkum idhae sugam vilaiyaadum Female Part Manjathilaa ungal nenjathilaa Manjathilaa ungal nenjathilaa Andha mananaalai oor ketkka sollattumaa Female Part Hmm hmm hmmm… Male Part Yaarodum pesa koodaadhu Female : Aagattum Male : Kettaalum solla koodaadhu Female : Aagattum Female Part Nee mattum maara koodaadhu Male : Aagattum Female : Verondrai naada koodaadhu Male : Aagattum Female Part Aa…aaa…aa…aa…aaa…aa..aaa… Haaa ha ha haaaa Male : Aaahaa haaaaa…
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : யாரோடும் பேசக் கூடாது பெண் : ஆகட்டும் ஆண் : கேட்டாலும் சொல்லக் கூடாது பெண் : ஆகட்டும் பெண் : நீ மட்டும் மாறக் கூடாது ஆண் : ஆகட்டும் பெண் : வேறொன்றை நாடக் கூடாது ஆண் : ஆகட்டும் பெண் : உள்ளத்தில் இல்லாதது சொல்லுக்கோ வராதது என்னென்று ஒரே முறை சொல்லலாமா..... ஆண் : கன்னத்திலா உடல் வண்ணத்திலா கன்னத்திலா உடல் வண்ணத்திலா மாங்கனி ஊறும் செவ்வாயின் கிண்ணத்திலா பெண் : ஆ ஹாஹஹா ஆண் : முத்து போல் உண்டாவது முல்லை பூ செண்டாவது இன்னும் நான் சொல்லாததை சொல்லலாமா பெண் : சொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன் சொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன் வண்ண தோளோடு தோள் சேர நில்லுங்களேன் பெண் : பக்திக்கும் இல்லாதது முக்திக்கும் விடாதது தித்திக்கும் அதா இது என்ன இன்பம் ஆண் : இன்பம் வரும் அது இன்னும் வரும் இன்பம் வரும் அது இன்னும் வரும் கொஞ்சம் நாளாக நாளாக சொர்க்கம் வரும் பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்..... ஆண் : மன்றத்தில் விழா வரும் மஞ்சத்தில் நிலா வரும் என்றைக்கும் இதே சுகம் விளையாடும் பெண் : மஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலா..... மஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலா.... அந்த மணநாளை ஊர் கேட்க சொல்லட்டுமா பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்..... ஆண் : யாரோடும் பேசக் கூடாது பெண் : ஆகட்டும் ஆண் : கேட்டாலும் சொல்லக் கூடாது பெண் : ஆகட்டும் பெண் : நீ மட்டும் மாறக் கூடாது ஆண் : ஆகட்டும் பெண் : வேறொன்றை நாடக் கூடாது ஆண் : ஆகட்டும் பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ..... ஆஅ.....ஆஅ..ஆஅ... ஹா ஹ ஹ ஹா ஆண் : ஆஆஹா ஹா.......
Song information
Singers: L. R. Eswari and P. B. Srinivas
Music by: M. S. Vishwanathan
Release information: From Ooty Varai Uravu (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari and P. B. Srinivas
- Film / album: Ooty Varai Uravu
- Composer: M. S. Vishwanathan