Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Vazhvennum sorgathil

Undhan pakkathil

Naan vara vendum

Sugam pera vendum

Andha varam vendum..mm…

Chorus

Jin jin janaakku

Janakku janakku

Jin jin janaakku

Janakku janakku

Jin jin janaakku naa

Chorus

Vazhvennum sorgathil

Undhan pakkathil

Ival vara vendum

Sugam pera vendum

Varam thara vendum..

Female : Mmm…

Female Part

Iyarkkai azhagu

Ilamai virunthu

Padaikkum vayathallavoo

Ingu rasikka thadai ennavoo

Chorus

Ival unnai ninathu

Thannai maranthu

Nenjil valarnthu

Ennan thavithu

Engo parakkiraal

Female Part

Vayathil arumbum

Vasantha sugangal

Vaazhvai valarkindrathu

Ninaithaal yaavum inikkindrathu

Vidai thedi paarthaalum kidaikathathu

Chorus

Ilam nenjin kanakku

Nenjin kanakku

Endrum inikkuthu

Female Part

Vazhvennum sorgathil

Undhan pakkathil

Naan vara vendum

Sugam pera vendum

Andha varam vendum..

Female & Chorus : ……………………

Female Part

Idhayam eluthum

Kavithai muzhuthum

Kaadhal kadhaigaladi

Ilamai malargal malarumadi

Chorus

Idhu maalai mayakkam

Kaalai urakkam

Aalai mayakkum

Oorai mayakkum

Velai piranthathae

Female Part

Vaadai kulirum

Vaadum udalum

Ennai vaattudhadi

Mannan ninaivai ootuthadi

Thadai poda mudiyaadha

Kadhai thaanadi

Chorus

Ilam nenjin kanakku

Nenjin kanakku

Endrum inikkuthu

Female Part

Vazhvennum sorgathil

Undhan pakkathil

Naan vara vendum

Sugam pera vendum

Andha varam vendum..

Chorus

Jin jin janaakku

Janakku janakku

Jin jin janaakku

Janakku janakku

Jin jin janaakku naa

Jana jJin jin janaakku

Janakku janakku

Jin jin janaakku

Janakku janakku

Jin jin janaakku naa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வாழ்வென்னும் சொர்க்கத்தில்

உந்தன் பக்கத்தில்

நான் வரவேண்டும்

சுகம் பெற வேண்டும்

அந்த வரம் வேண்டும் ம்ம்ம்ம் .......

குழு : ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு

ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு

ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு

குழு : வாழ்வென்னும் சொர்க்கத்தில்

உந்தன் பக்கத்தில்

இவள் வரவேண்டும்

சுகம் பெற வேண்டும்

வரம் தர வேண்டும்...

பெண் : ம்ம்ம்ம்

பெண் : இயற்கை அழகு

இளமை விருந்து

படைக்கும் வயதல்லவோ..

இங்கு ரசிக்க தடை என்னவோ

குழு : இவள் உன்னை நினைத்து

தன்னை மறந்து

நெஞ்சில் வளர்ந்து

எண்ணம் தவித்து

எங்கோ பறக்கிறாள்

பெண் : வயதில் அரும்பும்

வசந்த சுகங்கள் வாழ்வை வளர்கின்றது

நினைத்தால் யாவும் இனிக்கின்றது...

பெண் : விடைத்தேடி

பார்த்தாலும் கிடைக்காதது

குழு : இள நெஞ்சின் கணக்கு

நெஞ்சின் கணக்கு

என்றும் இனிக்குது

பெண் : வாழ்வென்னும் சொர்க்கத்தில்

உந்தன் பக்கத்தில்

நான் வரவேண்டும்

சுகம் பெற வேண்டும்

அந்த வரம் வேண்டும்

பெண் மற்றும் குழு : ...................

பெண் : இதயம் எழுதும் கவிதை

முழுதும் காதல் கதைகளடி

இளமை மலர்கள் மலருமடி

குழு : இது மாலை மயக்கம்

காலை உறக்கம்

ஆளை மயக்கும் ஊரே

மயங்கும் வேளை பிறந்ததே

பெண் : வாடை குளிரும்

வாடும் உடலும்

என்னை வாட்டுதடி

மன்னன் நினைவை ஊட்டுதடி

பெண் : தடைப்போட

முடியாத கதைதானடி

குழு : இள நெஞ்சின் கணக்கு

நெஞ்சின் கணக்கு

என்றும் இனிக்குது

பெண் : வாழ்வென்னும் சொர்க்கத்தில்

உந்தன் பக்கத்தில்

நான் வரவேண்டும்

சுகம் பெற வேண்டும்

அந்த வரம் வேண்டும் ம்ம்ம்.....

குழு : {ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு

ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு

ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு} (2)

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Aalukkoru Aasai (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song