Roman script
Singers : Jikki and Chorus Music by : S. M. Subbaiah Naidu Both : Varuga varuga vaendhae… Varuga varuga vaendhae… Engal thalaiyaana kalai njaanam Thanai pottrum thalaivaa nee Both : Varuga varuga vaendhae… Female Part Veeram urangaadha thennaadu thanaiyaalum Vaendhae…nee varugavae Female Part Paar pughazhum udhaya sooriyanae Both : Paar pughazhum udhaya sooriyanae Pasi indri puvi kaakkum paarthibanae Varuga varugavae… Both : Muthamizhum naavil payiraagumae Thamizh mozhiyae unadhu uyiraagumae Muthamizhum naavil payiraagumae Thamizh mozhiyae unadhu uyiraagumae Ethisaiyum vettri kondavanae Eendhu eendhu karam sivandhavanae Both : Varuga varuga vaendhae… Both : Vael varugavae veera vaal varugavae Vinnai thodum nin perumai varugavae Both : Vinnai thodum nin perumai varugavae Vaagai maalai tharum maamanam varugavae Female Part Malai meedhu thondrum muzhu nilavu pola… Aa…aa….aa…aa…aa…aa…aa….a… Both : Malai meedhu thondrum muzhu nilavu pola Yaanai thalai meedhu ven kudai Pidikkum thalaivanae Both : Varuga varuga vaendhae endrum Inidhaana dhraavida poongaavil malarndha Vaendhae nee varugavae Varuga varuga vaendhae…
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு இருவர் : வருக வருக வேந்தே... வருக வருக வேந்தே... எங்கள் தலையான கலை ஞானம் தனைப் போற்றும் தலைவா நீ இருவர் : வருக வருக வேந்தே... பெண் : வீரம் உறங்காத தென்னாடு தனையாளும் வேந்தே நீ வருகவே பெண் : பார் புகழும் உதய சூரியனே இருவர் : பார் புகழும் உதய சூரியனே பசியின்றி புவி காக்கும் பார்த்திபனே வருக வருகவே... இருவர் : முத்தமிழும் நாவில் பயிராகுமே தமிழ் மொழியே உனது உயிராகுமே முத்தமிழும் நாவில் பயிராகுமே தமிழ் மொழியே உனது உயிராகுமே எத்திசையும் வெற்றி கொண்டவனே ஈந்து ஈந்து கரம் சிவந்தவனே இருவர் : வருக வருக வேந்தே... இருவர் : வேல் வருகவே வீர வாள் வருகவே விண்ணைத் தொடும் நின் பெருமை வருகவே இருவர் : விண்ணைத் தொடும் நின் பெருமை வருகவே வாகை மாலை தரும் மாமணம் வருகவே பெண் : மலை மீது தோன்றும் முழு நிலவு போல... ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ..ஆ... இருவர் : மலை மீது தோன்றும் முழு நிலவு போலே யானை தலை மீது வெண் குடை பிடிக்கும் தலைவனே இருவர் : வருக வருக வேந்தே என்றும் இனிதாக திராவிடப் பூங்காவில் மலர்ந்த வேந்தே நீ வருகவே வருக வருக வேந்தே...
Song information
Singers: Jikki and Chorus
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: Jikki and Chorus
- Film / album: Nadodi Mannan
- Composer: S. M. Subbaiah Naidu