Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae

Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae

Female Part

Pazhaniyam padhiyinil iruppavanae

Adiyavan thuyaragalai thaduppavanae

Female Part

Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae

Female Part

Thuyar kadhai en vaazhvil

Thodarkathai endraanaal

Kandum kaanaatha kolam enna

Thuyar kadhai en vaazhvil

Thodarkathai endraanaal

Kandum kaanaatha kolam enna

Female Part

Alai kadal siru odam puyal vasam thadumaara

Vanthu kaavaatha maayam enna

Female Part

Devanae ariyaayo thaayin ullam

Neeyum oru thaayin pillaithaan

Devanae ariyaayo thaayin ullam

Neeyum oru thaayin pillaithaan

Un manam nalla ponmanam alla

Kal manam endrum arinthaenae

Female Part

Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae

Female Part

Oru malar kaniyaamal karugida vidalaamo

Annai naan seitha paavam enna

Oru malar kaniyaamal karugida vidalaamo

Annai naan seitha paavam enna

Anuthinam alangaaram aaraththi abhishegam

Yaavum naan seithu laabam enna

Female Part

Velodu mayil meedhu odi vanthu

Pillai noi theerkka vendumae

Velodu mayil meedhu odi vanthu

Pillai noi theerkka vendumae

Shanmuganaathaa innarul nee thaa

Panniru kangal malaraathaa

Female Part

Vadivelanae sivabalanae

Thirumaalin marumaganae

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வடிவேலனே சிவபாலனே

திருமாலின் மருமகனே

வடிவேலனே சிவபாலனே

திருமாலின் மருமகனே

பெண் : பழனியம் பதியினில் இருப்பவனே

அடியவர் துயர்களை தடுப்பவனே.....

பெண் : வடிவேலனே சிவபாலனே

திருமாலின் மருமகனே

பெண் : துயர் கதை என் வாழ்வில்

தொடர்கதை என்றானால்

கண்டும் காணாத கோலம் என்ன

துயர் கதை என் வாழ்வில்

தொடர்கதை என்றானால்

கண்டும் காணாத கோலம் என்ன

பெண் : அலைக் கடல் சிறு ஓடம் புயல் வசம் தடுமாற

வந்து காவாத மாயம் என்ன

பெண் : தேவனே அறியாயோ தாயின் உள்ளம்

நீயும் ஒரு தாயின் பிள்ளைதான்.....

தேவனே அறியாயோ தாயின் உள்ளம்

நீயும் ஒரு தாயின் பிள்ளைதான்.....

உன் மனம் நல்ல பொன்மனம் அல்ல

கல் மனம் என்று அறிந்தேனே...

பெண் : வடிவேலனே சிவபாலனே

திருமாலின் மருமகனே

பெண் : ஒரு மலர் கனியாமல் கருகிட விடலாமோ

அன்னை நான் செய்த பாவம் என்ன

ஒரு மலர் கனியாமல் கருகிட விடலாமோ

அன்னை நான் செய்த பாவம் என்ன

அனுதினம் அலங்காரம் ஆரத்தி அபிஷேகம்

யாவும் நான் செய்து லாபம் என்ன

பெண் : வேலோடு மயில் மீது ஓடி வந்து

பிள்ளை நோய் தீர்க்க வேண்டுமே

வேலோடு மயில் மீது ஓடி வந்து

பிள்ளை நோய் தீர்க்க வேண்டுமே

ஷண்முகநாதா இன்னருள் நீ தா

பன்னிரு கண்கள் மலராதா....

பெண் : வடிவேலனே சிவபாலனே

திருமாலின் மருமகனே

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Mangala Nayagi (1980) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song