Roman script
Singer : L. R. Eswari Music by : Viswanathan- Ramamoorthy Chorus Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo Female Part Mana medai thannil Manamae kaanum Thirunaalai kaana vaaraayo Chorus Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo Female Part Manakkolam konda magalae Pudhu maakkolam podu mayilae Gunakkolam konda kaniyae Namm kulam vaazha paadu kuyilae Female Part Sirikkaadha vaayum sirikkaadho Thirunaalai kandu magizhaadho..oo Chorus : Sirikkaadha vaayum sirikkaadho Thirunaalai kandu magizhaadho Chorus Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo Female Part Thaniyaaga kaana varuvaar Ival thalir pola thaavi anaivaal Kani pola serndhu magizhvaal Iru kann moodi maarbil thuyilvaal Female Part Ezhilaana koondhal kalaiyaadhoo Idhamaana inbam malaraadho… Chorus Ezhilaana koondhal kalaiyaadhoo Idhamaana inbam malaraadho… Chorus Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo Female Part Malaraadha pennmai malarum Munbu theriyaadha unmai theriyum Mayangaadha kanngal mayangum Munbu vilangaadha sedhi vilangum Female Part Iravodu nenjam urugaadho Irandodu moondru valarathoo Iravodu nenjam urugaadho Irandodu moondru valarathoo Chorus Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo Female Part Mana medai thannil Manamae kaanum Thirunaalai kaana vaaraayo Chorus Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி குழு : வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ பெண் : மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ குழு : வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ பெண் : மணக்கோலம் கொண்ட மகளே புது மாக்கோலம் போடு மயிலே குணக்கோலம் கொண்ட கனியே நம் குலம் வாழப் பாடு குயிலே பெண் : சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ குழு : சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ குழு : வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ பெண் : தனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள் கண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள் பெண் : எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ குழு : எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ குழு : வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ பெண் : மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும் மயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும் பெண் : இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்று வளராதோ இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்று வளராதோ குழு : வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ பெண் : மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ குழு : வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ
Song information
Singer: L. R. Eswari
Music by: Viswanathan- Ramamoorthy
Release information: From Pasamalar (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Pasamalar
- Composer: Viswanathan- Ramamoorthy