Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Male Part Vaanam kottudhu veliyae Vaada kattudhu kiliyae Adi vaanam kottudhu veliyae Vaada kattudhu kiliyae Vandhen kannu inneramdhaan Vanji unna kondaadathaan En thaagam theriyalaiya Unakku ennaanu velangalaiyaa Male Part Adi vaanam kottudhu veliyae Vaada kattudhu kiliyae Male Part Vaazha marathula thaelu kotta paakkudhu Oodha kaathula nenjakuzhi verkkudhu Male Part Vaazha marathula thaelu kotta paakkudhu Oodha kaathula nenjakuzhi verkkudhu Kattumaram ippa poopookuthu haang Thotta idam ippa thanalaachudhu Adi othaiyilae enna vittu Nikkuradhu rombha thappu Male Part Adi vaanam kottudhu veliyae Vaada kattudhu kiliyae Vandhen kannu inneramdhaan Vanji unna kondaadathaan En thaagam theriyalaiya Unakku ennaanu velangalaiyaa Female Part Vayasum izhukudhu vaalibamum thudikkuthu Vandu poovukkulae vattamida nenaikkudhu Female Part Vayasum izhukudhu vaalibamum thudikkuthu Vandu poovukkulae vattamida nenaikkudhu Panjanaikku innum naalaguminga Konjuvathu ippa koodathunga Ada panjukkulla theeyai vechu Paakurathu rombha thappu Female Part Kaalam koodum varaikkum Kaadhal thaane inikkum Pethavanga mathavanga kuthangsolla koodathunga Naalaana dhenam uravu Ippa venaanga thalaikunivu Male Part Adi pen kulathu gunam idhu thaan Nee sollurathum rombha seri thaan Adi pen kulathu gunam idhu thaan Nee sollurathum rombha seri thaan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : வானம் கொட்டுது வெளியே வாடக் கட்டுது கிளியே அடி வானம் கொட்டுது வெளியே வாடக் கட்டுது கிளியே வந்தேன் கண்ணு இந்நேரந்தான் வஞ்சி உன்னக் கொண்டாடத்தான் என் தாகம் தெரிலையா உனக்கு என்னான்னு வெளங்கலையா ஆண் : அடி வானம் கொட்டுது வெளியே வாடக் கட்டுது கிளியே.. ஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது ஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது கட்டுமரம்......இப்ப பூப்பூக்குது ஹாங்.... தொட்ட இடம் இப்ப தணலாச்சுது அடி ஒத்தையிலே என்ன விட்டு நிக்குறது ரொம்ப தப்பு ஆண் : அடி வானம் கொட்டுது வெளியே வாடக் கட்டுது கிளியே வந்தேன் கண்ணு இந்நேரந்தான் வஞ்சி உன்னக் கொண்டாடத்தான் என் தாகம் தெரிலையா உனக்கு என்னான்னு வெளங்கலையா பெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது பெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது பஞ்சணைக்கு இன்னும் நாளாகுங்க கொஞ்சுவது இப்ப கூடாதுங்க அட பஞ்சுக்குள்ள தீயை வச்சு பாக்குறது ரொம்ப தப்பு பெண் : காலம் கூடும் வரைக்கும் காதல்தானே இனிக்கும் பெத்தவங்க மத்தவங்க குத்தஞ் சொல்ல கூடாதுங்க நாளானா தெனம் உறவு இப்ப வேணாங்க தலைக்குனிவு ஆண் : அடி பெண் குலத்தின் குணம் இதுதான் நீ சொல்லுறது ரொம்ப சரிதான் அடி பெண் குலத்தின் குணம் இதுதான் நீ சொல்லுறது ரொம்ப சரிதான்..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Kunguma Kodu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Kunguma Kodu
- Composer: S. A. Rajkumar