Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Azhagiya pennae Neeyor adhisaya nilavo Theyaamal neeyirukka Dhinamum unai paarththu naanallavo Theigiren….mmm….thaeigiren….mm….theigiraen Male Part Vaanam illaamal megam illaamal Ulavum nilavenna neeyo Neenthum un meni yaenthum Pon vaanam naano Female Part Un kadhal kondaadum Kavithai ellaamae thaeno En aasai ennangal Yaavum unnodu thaano Male Part Vaanam illaamal megam illaamal Ulavum nilavenna neeyo Neenthum un meni yaenthum Pon vaanam naano Male Part Kaamadevan keerthanam Kaadhil kettatho Kaadhil ketta velaiyil Kadhal pooththatho Female Part Un ilakkiyam ezhuthidum yaedu En idhazhgal aaga vendum En ennangal urangidum koodu En idhayam aaga vendum Male Part En paadalgal suranthidum keni Paavaiyum thirumeni Female Part Vaanam illaamal megam illaamal Ulavum nilavenna naano Neenthum un meni yaenthum Pon vaanam neeyo… Female Part Kaattril aadum poonthalir poovai soodavaa Poovai soodum poovai naan maalai soodavo Male Part Oru thalaivanum thalaiviyum kooda Kai thazhuvi thazhuvi kondu aada Nam ninaivugal nadhiyena oda Naam nerungi nerungi inbam theda Female Part Nam uravugal kaninthidum kaalam Maalaigal manakkolam Male Part Vaanam illaamal megam illaamal Ulavum nilavenna neeyo Neenthum un meni yaenthum Pon vaanam naano Female Part Un kadhal kondaadum Kavithai ellaamae thaeno En aasai ennangal Yaavum unnodu thaano
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அழகிய பெண்ணே நீயோர் அதிசய நிலவோ தேயாமல் நீயிருக்க தினமும் உனைப் பார்த்து நானல்லவோ தேய்கிறேன்......ம்ம்ம்...தேய்கிறேன்.....ம்ம்....தேய்கிறேன் ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் உலவும் நிலவென்ன நீயோ நீந்தும் உன் மேனி ஏந்தும் பொன் வானம் நானோ.... பெண் : உன் காதல் கொண்டாடும் கவிதை எல்லாமே தேனோ என் ஆசை எண்ணங்கள் யாவும் உன்னோடு தானோ...... ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் உலவும் நிலவென்ன நீயோ நீந்தும் உன் மேனி ஏந்தும் பொன் வானம் நானோ.... ஆண் : காமதேவன் கீர்த்தனம் காதில் கேட்டதோ காதில் கேட்ட வேளையில் காதல் பூத்ததோ பெண் : உன் இலக்கியம் எழுதிடும் ஏடு என் இதழ்கள் ஆக வேண்டும் உன் எண்ணங்கள் உறங்கிடும் கூடு என் இதயம் ஆக வேண்டும் ஆண் : என் பாடல்கள் சுரந்திடும் கேணி பாவையுன் திருமேனி....... பெண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் உலவும் நிலவென்ன நானோ நீந்தும் என் மேனி ஏந்தும் பொன் வானம் நீயோ..... பெண் : காற்றில் ஆடும் பூந்தளிர் பூவை சூடவா பூவை சூடும் பூவை நான் மாலை சூடவோ ஆண் : ஒரு தலைவனும் தலைவியும் கூட கைத் தழுவி தழுவி கொண்டு ஆட நம் நினைவுகள் நதியென ஓட நாம் நெருங்கி நெருங்கி இன்பம் தேட பெண் : நம் உறவுகள் கனிந்திடும் காலம் மாலைகள் மணக்கோலம்...... ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் உலவும் நிலவென்ன நீயோ நீந்தும் உன் மேனி ஏந்தும் பொன் வானம் நானோ.... பெண் : உன் காதல் கொண்டாடும் கவிதை எல்லாமே தேனோ என் ஆசை எண்ணங்கள் யாவும் உன்னோடு தானோ......
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Rusi (1984) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Rusi
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali