Roman script
Singer : K. J. Yesudas Music by : K. V. Mahadevan Male Part Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Vaazhkai engae mudigirathu Kandu pidikka sollungal Male Part Paaimarakappal ingae paruva kaattru engae Paaimarakappal ingae paruva kaattru engae Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Male Part Nadhiyin mudivai naam arivom Vidhiyin mudivai yaar arivaar Iravin mudivai naam arivom Uravin mudivai yaar arivaar Male Part Nadhiyin mudivai naam arivom Vidhiyin mudivai yaar arivaar Iravin mudivai naam arivom Uravin mudivai yaar arivaar Male Part Naetrugal inimel varuvathillai Naalaigal innum varavillai Naetrugal inimel varuvathillai Naalaigal innum varavillai Male Part Paadhaigal ingae therivadhillai Payanangal mattum mudiyavillai Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Male Part Imaiyae unakku urakkam illai Iravae unakku irakkam illai Idhayam pirivai porukkavillai Enakkoo azhudhu palakkam illai Male Part Imaiyae unakku urakkam illai Iravae unakku irakkam illai Idhayam pirivai porukkavillai Enakkoo azhudhu palakkam illai Male Part Deivathai engae theduvathu Dhisaigal engae seruvadhu Deivathai engae theduvathu Dhisaigal engae seruvadhu Nadhi vazhi pogum bommaiyai pol Vidhi vazhi pogum penmai idhu Male Part Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Vaazhkai engae mudigirathu Kandu pidikka sollungal Male Part Paaimarakappal ingae paruva kaattru engae Paaimarakappal ingae paruva kaattru engae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
ஆண் : வானம் எங்கே முடிகிறது
கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்க்கை எங்கே முடிகிறது
கண்டு பிடிக்க செல்லுங்கள்
ஆண் : பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே
பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே
வானம் எங்கே முடிகிறது
கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்
ஆண் : {நதியின் முடிவை நாமறிவோம்
விதியின் முடிவை யாரறிவார்
இரவின் முடிவை நாம் அறிவோம்
உறவின் முடிவை யார் அறிவார்} ( 2 )
ஆண் : நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
ஆண் : பாதைகள் இங்கே தெரியவில்லை
பயணங்கள் மட்டும் முடியவில்லை
வானம் எங்கே முடிகிறது
கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்
ஆண் : {இமையே உனக்கு உறக்கமில்லை
இரவே உனக்கு இரக்கமில்லை
இதயம் பிரிவை பொறுக்கவில்லை
எனக்கோ அழுது பழக்கமில்லை} ( 2 )
ஆண் : தெய்வத்தை எங்கே தேடுவது
திசைகள் எங்கே சேருவது
தெய்வத்தை எங்கே தேடுவது
திசைகள் எங்கே சேருவது
நதி வழிப் போகும் பொம்மையை போல்
விதி வழிப் போகும் பெண்மை இது
ஆண் : வானம் எங்கே முடிகிறது
கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்க்கை எங்கே முடிகிறது
கண்டு பிடிக்க செல்லுங்கள்
ஆண் : பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே
பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கேSong information
Singer: K. J. Yesudas
Music by: K. V. Mahadevan
Release information: From Paaimarakkappal (1988) · Singer: K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Paaimarakkappal
- Composer: K. V. Mahadevan