Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Unnai paarthu Indha ulagam sirikkiradhu Unnai paarthu Indha ulagam sirikkiradhu Un seyalai paarthu Un nizhalum verukkiradhu Un seyalai paarthu Un nizhalum verukkiradhu Male Part Unnai paarthu Indha ulagam sirikkiradhu Male Part Paadum paravai Paayum mirugam Paadum paravai paayum mirugam Ivaigalukkellaam paguttharivillai Aanaal avaigalukkullae soozhchighal illai Male Part Unnai paarthu Indha ulagam sirikkiradhu Male Part Saeval kooda thoongum ulagai Koovi ezhuppum kuralaalae Male Part Yeval seiyum kaaval kaakkum Naaigalum thanghal gunathaalae Male Part Irai kidaithaalum illai endraalum Uravai valarkkum kaakkaigalae Male Part Irai kidaithaalum illai endraalum Uravai valarkkum kaakkaigalae Inathai inamae pagaippadhellaam Manidhan vagutha vaazhkkaiyilae… Aaa… aaa… aaa… aaahhahaa… Male Part Unnai paarthu Indha ulagam sirikkiradhu Male Part Vaanil neendhum megam kandaal
Vanna mayilgal aadaadho Male Part Vaazhai polae thogai viriya Valar pirai aayiram thondraadho Male Part Azhagum kalaiyum vaazhum naadu Aandavan veedaai thigazhaadho Male Part Azhagum kalaiyum vaazhum naadu Aandavan veedaai thigazhaadho Avaigalai ellaam azhikka ninaithaal Sarithiram unnai igazhaadho… Aa… aa…aa… aaahhahaa… Male Part Unnai paarthu Indha ulagam sirikkiradhu Male Part Nee kadavulai paarthadhu kidaiyaadhu Avan karuppaa sigappaa theriyaadhu Nee kadavulai paarthadhu kidaiyaadhu Avan karuppaa sigappaa theriyaadhu Iraivan oruvan irukkindraan Indha ezhaighal uzhaippil sirikkindraan Iraivan oruvan irukkindraan Indha ezhaighal uzhaippil sirikkindraan… Aa…aaa… aaa… aahhahaa… Male Part Thondra thaan pogiradhu Sama urimai samudhaayam… Male Part Maraiya thaan pogiradhu Thani manidhan aniyaayam… Malara thaan pogiradhu Engaladhu pudhu vaazhvu… Maara thaan pogiradhu Manidhaa un vilaiyaattu…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ஆண் : பாடும் பறவை பாயும் மிருகம் பாடும் பறவை பாயும் மிருகம் இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ஆண் : சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே ஆண் : ஏவல் செய்யும் காவல் காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே ஆண் : இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே ஆண் : இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே இனத்தை இனமே பகைப்பது எல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆஹாஹா...... ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ஆண் : வானில் நீந்தும் மேகம் கண்டால் வண்ண மயில்கள் ஆடாதோ ஆண் : வாழை போல தோகை விரிய வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ஆண் : அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ஆண் : அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ அவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால் சரித்திரம் உன்னை இகழாதோ ஆ....ஆ....ஆ....ஆஹாஹா...... ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ஆண் : நீ கடவுளைப் பார்த்தது கிடையாது அவன் கறுப்பா சிவப்பா தெரியாது நீ கடவுளைப் பார்த்தது கிடையாது அவன் கறுப்பா சிவப்பா தெரியாது இறைவன் ஒருவன் இருக்கின்றான் இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் இறைவன் ஒருவன் இருக்கின்றான் இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் ஆ....ஆ....ஆ....ஆஹாஹா...... ஆண் : தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம் ஆண் : மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்..... மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு.... மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Adimai Penn (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Adimai Penn
- Composer: K. V. Mahadevan