Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : Viswanathan–Ramamoorthy Female Part Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female Part Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female Part Andru sendravanai innum kanavillai Enna seivathadi thozhi Andru sendravanai innum kanavillai Enna seivathadi thozhi Female Part Thendral thotadhadi thingal suttathadi Kangal vaaduthadi thozhi Aaha thendral thottadhadi thingal suttathadi Kangal vaaduthadi thozhi Female Part Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female Part Panner nadhiyil kulithu vanthaalum Paruvam thoongumae thalaivi Female Part Venneer nadhiyai paneer enavae
Pesalagumo thozhi Female Part Idayani megalai vizhundhidum vannam Yengalaagumo thalaivi Female Part Kadairunthum porul kolvorillayae Kalakkam varadho thozhi Female Part Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female Part Muthum maniyum karugidum vannam Mogathil aazhndhaal thalaivi Female Part Muthathai marandhaval sithathil Irunthathai mounathil arindhaal thozhi Female Part Kaaviri karaiyin orathil evvidham Kaathirundhaal andha thalaivi Female Part Kaaviya naayagan kaadhalan vanigan Kovalan enbaal manaivi Female Part Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female Part Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி? அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி? பெண் : தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி ஆஹா தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : பன்னீர் நதியில் குளித்து வந்தாலும் பருவம் தூங்குமே தலைவி பெண் : வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே பேசலாகுமோ தோழி பெண் : இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம் ஏங்கலாகுமோ தலைவி பெண் : கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே கலக்கம் வராதோ தோழி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி பெண் : முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை மௌனத்தில் அறிந்தாள் தோழி பெண் : காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம் காத்திருந்தாள் அந்தத் தலைவி பெண் : காவிய நாயகன் காதலன் வணிகன் கோவலன் என்பான் மனைவி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி?
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: Viswanathan–Ramamoorthy
Release information: From Pachhai Vilakku (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Pachhai Vilakku
- Composer: Viswanathan–Ramamoorthy