Roman script
Singers : P. Suseela, P. Madhuri and T. K. Kala Music by : D. B. Ramachandran and S. P. Venkatesh Lyrics by : A. Maruthakasi Female Part Thiruvennum peyarukku uriyavalo vaa Engal thirumanaiyil nirantharamaai kudiyirukka vaa Chorus : Thiruvennum peyarukku uriyavalo vaa Engal thirumanaiyil nirantharamaai kudiyirukka vaa Female Part Thiruvennum peyarukku uriyavalo vaa Female Part Porulennum oru sollin arumporulae vaa Porulennum oru sollin arumporulae vaa Valam pongum selvam pathinaarum pongidavae vaa Valam pongum selvam pathinaarum pongidavae vaa Female Part Sengamalamthanil thangi nalantharum mangalakaramae vaa Mangaiyar vendidum manjal kungumam Vazhangum varalakshmi vaa Female Part Sengamalamthanil thangi nalantharum mangalakaramae vaa Mangaiyar vendidum manjal kungumam Vazhangum varalakshmi vaa Female Part Angaiyar kanniyin aaruyir naaththi Sangaran sodhari vaa Sangaran sodhari vaa Female Part
Ponnil maniyil poovil anbil Porunthi iruppavalae Sennel kadhiril dheepa sudaril Siriththu magizhpavalae Female Part Kannal suvaiyil pannin oliyil Kalanthu iruppavalae Kannal suvaiyil pannin oliyil Kalanthu iruppavalae Female Part Minnum vaanaga villin yaezhvagai Vannaththil iruppavalae Minnum vaanaga villin yaezhvagai Vannaththil iruppavalae Vannaththil iruppavalae Engal ennaththil iruppavalae Chorus Thiruvennum peyarukku uriyavalo vaa Female Part Thoranai panthalil thogaiyar nagaiyl Thondridum arputhamae Thoranai panthalil thogaiyar nagaiyl Thondridum arputhamae Female Part Veerarkal tholinil verththidum uzhaippinil Vilangidum porpathamae Carena pozhinthidum kaalnadai selvaththai Kaaththidum narpathamae Aaranam poottridum naaranan maarbinil Amarnthidum karpagamae Amarnthidum karpagamae Chorus Thiruvennum peyarukku uriyavalo vaa Engal thirumanaiyil nirantharamaai kudiyirukka vaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா, பி. மாதுரி மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன் மற்றும் எஸ். பி. வெங்கடேஷ் பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா எங்கள் திருமனையில் நிரந்தரமாய் குடியிருக்க வா குழு : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா எங்கள் திருமனையில் நிரந்தரமாய் குடியிருக்க வா பெண் : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா பெண் : பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா பெண் : செங்கமலம்தனில் தங்கி நலந்தரும் மங்களகரமே வா மங்கையர் வேண்டிடும் மஞ்சள் குங்குமம் வழங்கும் வரலட்சுமி வா..... பெண் : செங்கமலம்தனில் தங்கி நலந்தரும் மங்களகரமே வா மங்கையர் வேண்டிடும் மஞ்சள் குங்குமம் வழங்கும் வரலட்சுமி வா..... பெண் : அங்கையர் கன்னியின் ஆருயிர் நாத்தி சங்கரன் சோதரி வா சங்கரன் சோதரி வா பெண் : பொன்னில் மணியில் பூவில் அன்பில் பொருந்தி இருப்பவளே செந்நெல் கதிரில் தீபச் சுடரில் சிரித்து மகிழ்பவளே பெண் : கன்னல் சுவையில் பண்ணின் ஒலியில் கலந்து இருப்பவளே..... கன்னல் சுவையில் பண்ணின் ஒலியில் கலந்து இருப்பவளே..... பெண் : மின்னும் வானக வில்லின் ஏழ்வகை வண்ணத்தில் இருப்பவளே மின்னும் வானக வில்லின் ஏழ்வகை வண்ணத்தில் இருப்பவளே வண்ணத்தில் இருப்பவளே எங்கள் எண்ணத்தில் இருப்பவளே குழு : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா பெண் : தோரணைப் பந்தலில் தோகையர் நகையில் தோன்றிடும் அற்புதமே தோரணைப் பந்தலில் தோகையர் நகையில் தோன்றிடும் அற்புதமே பெண் : வீரர்கள் தோளினில் வேர்த்திடும் உழைப்பினில் விளங்கிடும் பொற்பதமே காரெனப் பொழிந்திடும் கால்நடை செல்வத்தை காத்திடும் நற்பதமே ஆரணம் போற்றிடும் நாரணன் மார்பினில் அமர்ந்திடும் கற்பகமே...... அமர்ந்திடும் கற்பகமே...... குழு : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா எங்கள் திருமனையில் நிரந்தரமாய் குடியிருக்க வா
Song information
Singers: P. Suseela, P. Madhuri and T. K. Kala
Music by: D. B. Ramachandran and S. P. Venkatesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Uravukku Kai Koduppom (1975) · Singer: P. Suseela, P. Madhuri and T. K. Kala · Lyricist: A. Maruthakasi · Music: D. B. Ramachandran and S. P. Venkatesh
Explore this song
- Singer: P. Suseela
- Singer: P. Madhuri and T. K. Kala
- Film / album: Uravukku Kai Koduppom
- Composer: D. B. Ramachandran and S. P. Venkatesh
- Lyricist: A. Maruthakasi