Roman script
Singers : S. Janaki and T. M. Soundararajan Music by : Ilayaraja Male Part Thaen malli poovae poonthendral kaattrae En kannae en raani neeyindri naan illaiyae Female Part Thaen malli poovae poonthendral kaattrae En kannaa en mannaa neeyindri naan illaiyae Male Part Thaen malli poovae… Male Part Muthaaram maar meedhu thavazhgindradhu Enakkadhil konjam idamum kodu Female Part Thaerundu neeyundu thirunaalundu Thirumagal nenjil thuyil kolla vaa Male Part Ulagamellaam oru nilavu Female Part Idhayamellaam oru ninaivu En vaazhvin aanandham neeyae… Male Part Thaen malli poovae poonthendral kaattrae Female Part En kannaa en mannaa neeyindri naan illaiyae Male Part Thaen malli poovae… Female Part Sevvaazhai pon maeni thudikkindradhu Siru thottil thandhu uranga vidu Male Part Thithikkum sevvaayum nanaigindradhu Siru mutham thandhu mayanga vidu Female Part Malargalilae anai amaippom Male Part Manmadhanai thunaikkazhaippom Iravaedhu pagalaedhu kannae Female Part Thaen malli poovae poonthendral kaattrae Male Part En kannae en raani Female Part Neeyindri naan illaiyae Male Part Thaen malli poovae poonthendral kaattrae Thaen malli poovae… Female : Aa… aa… aa… mm..mm..mm.. Aa… aa… aa… } (Overlap)
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே ஆண் : தேன்மல்லி பூவே..... ஆண் : முத்தாரம் மார் மீது தவழ்கின்றது எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு பெண் : தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு திருமகள் நெஞ்சில் துயில் கொள்ளவா ஆண் : உலகமெல்லாம் ஒரு நிலவு பெண் : இதயமெல்லாம் ஒரு நினைவு என் வாழ்வின் ஆனந்தம் நீயே ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே பெண் : என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே ஆண் : தேன்மல்லி பூவே..... பெண் : செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது சிறு தொட்டில் தந்து உறங்க விடு ஆண் : தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது சிறு முத்தம் தந்து மயங்கவிடு பெண் : மலர்களிலே அணை அமைப்போம் ஆண் : மன்மதனை துணைக்கழைப்போம் இரவேது பகலேது கண்ணே பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே ஆண் : என் கண்ணே என் ராணி பெண் : நீயின்றி நானில்லையே ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே தேன்மல்லி பூவே..... பெண் : ஆ.....ஆ....ஆ....ம்ம்.....ம்ம்.....ம்ம்.... ஆ....ஆ.....ஆ.....
Song information
Singers: S. Janaki and T. M. Soundararajan
Music by: Ilayaraja
Release information: From Thyagam (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki and T. M. Soundararajan
- Film / album: Thyagam
- Composer: Ilayaraja