Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Aaaa aaa aaa aaa aaa aaa aaa aaa Male Part Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu Thanimai kodhikudhu Ninaivinil analum adikudhu Idhayam thudikudhu thunai varathaan Male Part Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu Female Part Medai yera koodumo Meendum namadhu naadagam Naanum neeyum servadhaal Yaarukenna vaadhagam Male Part Yaarai cholli novadhu Kaalam seidha kolam Unnai ennai vaatudhu Kaadhal seidha paavam Female Part Kannum nenjum en vasam illaiyae Male Part Enna seivadhu solladi mullaiyae Female Part Kanavil matumae kaigal seralaam kannaa … Male Part Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu Female Part Thanimai kodhikudhu Ninaivinil analum adikudhu Idhayam thudikudhu thunai varathaan Female Part Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu Male Part Jeevan rendum serndhadhu Devan vagutha saasanam Kaadhal endha naalilum Kavidhai polae saasvatham Female Part Indru vandha nesamo Poorva jenma yogam Innum ezhu jenmamum Valarum indha yaagam Male Part Meendum meendum boomiyil thondralaam Female Part Kaadhal oviyam paarvayil theetalaam Male Part Pirivu enbadhae uravukaaga dhaan kannae … Female Part Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu Male Part Thanimai kodhikudhu Ninaivinil analum adikudhu Idhayam thudikudhu thunai varathaan Male Part Thendral kaatrae konjam nillu Angae sendru anbai chollu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது இதயம் துடிக்குது துணை வரத்தான் ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு பெண் : மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம் நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம் ஆண் : யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம் உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம் பெண் : கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே ஆண் : என்ன செய்வது சொல்லடி முல்லையே பெண் : கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா ஆண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு பெண் : தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது இதயம் துடிக்குது துணை வரத்தான் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு ஆண் : ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம் காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம் பெண் : இன்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம் இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம் ஆண் : மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம் பெண் : காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம் ஆண் : பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே பெண் : தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு ஆண் : தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது இதயம் துடிக்குது துணை வரத்தான் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு அங்கே சென்று அன்பைச் சொல்லு
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Eeramaana Rojavae (1991)
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Eeramaana Rojavae
- Composer: Ilayaraja