Roman script

Singer : S. Janaki

Music by : Laxmikant-Pyarelal

Female Part

Aaareeraaro…aaariraariro..

Aareeraaro…aaariraariro..

Female Part

Thaenoorum raagam

Naan paadum neram

Vinmeengal vaanin melae thoongudhae

Ullaasa megam oorgolam pogum

Vinmeengal vaanin melae thoongudhae

{Kannin maniyae…

Neeyum urangu}(2)

Female Part

Aadaadha deepandhaan

En illam..mmm

Poongaatrukkum thaangaadhu

En ullam…mmm

Female Part

Un anbaalae pongaadho

Aanandha vellam

Kanavugalae…kanavugalae..

Iravennum deepam

Erigindra neram

Female Part

Uravai thedi vaarungal

Kangalil thendral veesum…

Kannurangu

Unnai neeyae marandhurangu…

Female Part

Thaenoorum raagam

Naan paadum neram

Vinmeengal vaanin melae thoongudhae

Raareeraaro…aaariraariro..

Kannin maniyae…neeyum urangu

Female Part

Aahaayam manmeedhu

Veezhaadhu

Nam sondhangal ennaalum

Maaraadhu

Female Part

Ini en pondra annaikku

Yegaandham yedhu..

Uravugalaal oru ulagam..

Idhu oru thottam

Kiligalin koottam

Female Part

Aattam paattam

Aarbaattam ketkkalaam

Annai nenjil saaindhidungal

Innum konjam oivedungal

Female Part

Thaenoorum raagam

Naan paadum neram

Vinmeengal vaanin melae thoongudhae

{Kannin maniyae…

Neeyum urangu}(2)

Female Part

Aaareeraaro…mmm hmmmm

Mmmhmmmm…laala lalalaa…

தமிழ்

பாடகி : எஸ் ஜானகி

இசையமைப்பாளர் :

லக்ஷ்மிகாந்த் - பயரிலல்

பெண் : ஆரீராரோ....ஆரிராரிரோ....

ஆரீராரோ....ஆரிராரிரோ..

பெண் : தேனூறும் ராகம்

நான் பாடும் நேரம்

விண்மீன்கள் வானின்

மேலே தூங்குதே

உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்

விண்மீன்கள் வானின்

மேலே தூங்குதே

கண்ணின் மணியே...நீயும் உறங்கு

கண்ணின் மணியே...நீயும் உறங்கு

பெண் : ஆடாத தீபந்தான்

என் இல்லம் ம்...

பூங்காற்றுக்கும் தாங்காது

என் உள்ளம் ம்...

பெண் : உன் அன்பாலே பொங்காதோ

ஆனந்த வெள்ளம்

கனவுகளே...கனவுகளே..

இரவென்னும் தீபம்

எரிகின்ற நேரம்

பெண் : உறவைத் தேடி வாருங்கள்

கண்களில் தென்றல் வீசும்...

கண்ணுறங்கு

உன்னை நீயே மறந்துறங்கு....

பெண் : தேனூறும் ராகம்

நான் பாடும் நேரம்

விண்மீன்கள் வானின்

மேலே தூங்குதே

உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்

விண்மீன்கள் வானின்

மேலே தூங்குதே

கண்ணின் மணியே...நீயும் உறங்கு

பெண் : ஆகாயம் மண் மீது

வீழாது

நம் சொந்தங்கள் எந்நாளும்

மாறாது

பெண் : இனி என் போன்ற அன்னைக்கு

ஏகாந்தம் ஏது ..

உறவுகளால் ஒரு உலகம் ..

இது ஒரு தோட்டம்

கிளிகளின் கூட்டம்

பெண் : ஆட்டம் பாட்டம்

ஆர்பாட்டம் கேட்கலாம்

அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்

இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்.

பெண் : தேனூறும் ராகம்

நான் பாடும் நேரம்

விண்மீன்கள் வானின்

மேலே தூங்குதே

உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்

விண்மீன்கள் வானின்

மேலே தூங்குதே

கண்ணின் மணியே...நீயும் உறங்கு

கண்ணின் மணியே...நீயும் உறங்கு

பெண் : ஆரீராரோ....ம்...ம்ம்....

ம்.....ம்ம்.....லால லலலா

Song information

Singer: S. Janaki

Music by: Laxmikant-Pyarelal

Release information: From Uyire Unakkaga (1986) · Lyricist: Vairamuthu

Explore this song