Roman script
Singers : T. M. Soundhararajan and L. R. Eswari Music by : K. V. Mahadevan Male Part Thaazham poovae thanga nilaavae Thalai yen kunigirathu Thaazham poovae thanga nilaavae Thalai yen kunigirathu Female Part Adhu kaaman thodutha kanaigalinaalae Kaniyaai kanigirathu Adhu kaaman thodutha kanaigalinaalae Kaniyaai kanigirathu Male Part Paadal suvaiyae panivaai malarae Bayamaen varugirathu Paadal suvaiyae panivaai malarae Bayamaen varugirathu Female Part Ilam paruvathin aasai uruvathil yeri Bayam pol therigirathu Ilam paruvathin aasai uruvathil yeri Bayam pol therigirathu Male Part Yelam kuzhalaai ilagiya nenjam Edhaiyoo nenaikiradhu Yelam kuzhalaai ilagiya nenjam Edhaiyoo nenaikiradhu Female Part Adhu naalum pazhagum Naalaiya poluthai Ninaithae parakkirathu.. Adhu naalum pazhagum naalaiya poluthai Ninaithae parakkirathu.. Male Part Poorana nilavin thoranam yeno Punnagai purigirathu Female : Adhil kaaranam paadhi kaariyam paadhi Kadhaiyaai varugirathu Adhil kaaranam paadhi kaariyam paadhi Kadhaiyaai varugirathu Male Part Ilamai thirandu thanimai nirainthu Idhayam malargirathu Female : Adhil uyirgal irandum pazhagiya pinnae Uravum purigiradhu Male Part Thaazham poovae thanga nilaavae Thalai yen kunigirathu Female Part Adhu kaaman thodutha kanaigalinaalae Kaniyaai kanigirathu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது பெண் : அது காமன் தொடுத்த கணைகளினாலே கனியாய்க் கனிகிறது அது காமன் தொடுத்த கணைகளினாலே கனியாய்க் கனிகிறது ஆண் : பாடல் சுவையே பனிவாய் மலரே பயமேன் வருகிறது பாடல் சுவையே பனிவாய் மலரே பயமேன் வருகிறது பெண் : இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி பயம் போல் தெரிகிறது இளம் பருவத்தின் ஆசை உருவத்தில் ஏறி பயம் போல் தெரிகிறது ஆண் : ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம் எதையோ நினைக்கிறது ஏலம் குழலாய் இளகிய நெஞ்சம் எதையோ நினைக்கிறது பெண் : அது நாளும் பழகும் நாளைய பொழுதை நினைத்தே பறக்கிறது.... அது நாளும் பழகும் நாளைய பொழுதை நினைத்தே பறக்கிறது.... ஆண் : பூரண நிலவின் தோரணம் ஏனோ புன்னகை புரிகிறது பெண் : அதில் காரணம் பாதி காரியம் பாதி கதையாய் வருகிறது அதில் காரணம் பாதி காரியம் பாதி கதையாய் வருகிறது ஆண் : இளமை திரண்டு தனிமை நிறைந்து இதயம் மலர்கிறது பெண் : அதில் உயிர்கள் இரண்டும் பழகிய பின்னே உறவும் புரிகிறது ஆண் : தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது பெண் : அது காமன் தொடுத்த கணைகளினாலே கனியாய்க் கனிகிறது
Song information
Singers: T. M. Soundhararajan and L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Release information: From Ratha Thilagam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundhararajan and L. R. Eswari
- Film / album: Ratha Thilagam
- Composer: K. V. Mahadevan