Roman script
Singers : T. R. Mahalingam, Seerkazhi Govindarajan and S. Varalakshmi Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Kannadasan Male Part Nanjai kazhanigalin naayaganae nee vaazhga Male Part Nadanamidum kaveri kaavalanae nee vaazhga Female Part Thanjamena varuvorkku thanjam vazhangukindra Thanjai peruvudaiya thalaivanae nee vaazhga Chorus Venjamaril vettri kandu Anjalikkum makkalukkor Vinnuyar periya koyil thantha Veera raja raja chozhanae nee vaazhga Chorus Thanjai periya koyil pallaandu vaazhgavae Thanjai periya koyil pallaandu vaazhgavae Thanjai periya koyil pallaandu vaazhgavae Thaaraniyil tamil pola nilai nindru vaazhgavae Thaaraniyil tamil pola nilai nindru vaazhgavae Chorus Thanjai periya koyil pallaandu vaazhgavae Male Part Moondru nilangalukkum mudi soottinaan Puvanam muzhuthum puli poriththa kodi naattinaan Moondru nilangalukkum mudi soottinaan Puvanam muzhuthum puli poriththa kodi naattinaan Male Part
Thondrum idangalil than pugazh naattinaan Thondrum idangalil than pugazh naattinaan Endrum chozhar paramparaikkae vazhi kaattinaan Chozhar paramparaikkae vazhi kaattinaan Chozhan vazhi kaattinaan….. Female Part Aayakalaigal pala nilai naattinaan Tamil aalum aringyargalukku sabhai koottinaan Kanni tamil aallum aringyargalukku sabhai koottinaan Thooyavarthamar vaazhvil thunai koottinaan Chozhan thottathaiyellaam ponnaakkinaan Thottathaiyellaam ponnaakkinaan Chozhan ponnaakkinaan Male Part Aram kaakka arasaalai uruvaakkinaan Aa….aa…aa….aa….aa….aa…aa…aa….aa….aa…aa… Aram kaakka arasaalai uruvaakkinaan Maram kaakka padaichaalai uruvaakkinaan Uyar kalvi koodangal uruvaakkinaan Bakthi valarnthida aalayam uruvaakkinaan Chozhan uruvaakkinaan….. Chorus Thanjai periya koyil pallaandu vaazhgavae Thaaraniyil tamil pola nilai nindru vaazhgavae Thaaraniyil tamil pola nilai nindru vaazhgavae Chorus Thanjai periya koyil pallaandu vaazhgavae
தமிழ்
பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். வரலட்சுமி இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க! ஆண் : நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க! பெண் : தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க குழு : வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கோர் விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க குழு : தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே ஆண் : மூன்று நிலங்களுக்கும் முடி சூட்டினான் புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான் மூன்று நிலங்களுக்கும் முடி சூட்டினான் புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான் ஆண் : தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டினான் தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டினான் என்றும் சோழர் பரம்பரைக்கே வழிக் காட்டினான் சோழர் பரம்பரைக்கே வழிக் காட்டினான் சோழன் வழிக் காட்டினான்.......... பெண் : ஆயக்கலைகள் பல நிலை நாட்டினான் தமிழ் ஆளும் அறிஞர்களுக்கு சபைக் கூட்டினான் கன்னி தமிழ் ஆளும் அறிஞர்களுக்கு சபைக் கூட்டினான் தூயவர்தமர் வாழ்வில் துணைக் கூட்டினான் சோழன் தொட்டதையெல்லாம் பொன்னாக்கினான் தொட்டதையெல்லாம் பொன்னாக்கினான் சோழன் பொன்னாக்கினான்......... ஆண் : அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான் ஆ....ஆ...ஆ..ஆ....ஆ...ஆ..ஆ....ஆ...ஆ..ஆ....ஆ...ஆ...... அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான் மறம் காக்க படைச்சாலை உருவாக்கினான் உயர் கல்விக் கூடங்கள் உருவாக்கினான் பக்தி வளர்ந்திட ஆலயம் உருவாக்கினான் சோழன் உருவாக்கினான்......... குழு : தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே குழு : தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
Song information
Singers: T. R. Mahalingam, Seerkazhi Govindarajan and S. Varalakshmi
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Rajaraja Chozhan (1972) · Singer: T. R. Mahalingam, Seerkazhi Govindarajan and S. Varalakshmi · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Singer: Seerkazhi Govindarajan and S. Varalakshmi
- Film / album: Rajaraja Chozhan
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Kannadasan