Roman script
Singers : P. Susheela and T. M . Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Thanneer suduvadhenna Thanneer suduvadhenna Saranjaramaai paaivadhenna Pennae nee thazhuvudhal pol Perinbam tharuvadhenna Male Part Thanneer suduvadhenna Saranjaramaai paaivadhenna Pennae nee thazhuvudhal pol Perinbam tharuvadhenna Female Part Pon maeni paarthadhenna Poovaadai kolvadhenna Pon maeni paarthadhenna Poovaadai kolvadhenna Thannai thaan marandhadhilae Thaneerum suduvadhenna Female Part Pon maeni paarthadhenna Poovaadai kolvadhenna Thannai thaan marandhadhilae Thaneerum suduvadhenna Male Part Angirundhu aadi vandhu Alaigal sollum saedhi enna Angirundhu aadi vandhu Alaigal sollum saedhi enna Velli kendai meenai polae Thullum kangal solvadhenna Thullum kangal solvadhenna Female Part Sonna pinnum kelvi enna Thuruvi thuruvi ketppadhenna Sonna pinnum kelvi enna Thuruvi thuruvi ketppadhenna Munnum pinnum paarppadhenna Muthaiyaa un vegam enna Muthaiyaa un vegam enna Chorus ……………………………. Male Part Thanneer suduvadhenna Saranjaramaai paaivadhenna Pennae nee thazhuvudhal pol Perinbam tharuvadhenna Male Part Maalai veyil vannam polae Manjal poosum kolam enna Maalai veyil vannam polae Manjal poosum kolam enna Manjalodu serndhu endhan Nenjam podum thaalam enna Nenjam podum thaalam enna Female Part Andhi saayum neram vandhum Minji minji povadhenna Andha naalai kaanum munnae Ammammaa yekkam enna Ammammaa yekkam yenna Chorus ……………………………. Male Part Thanneer suduvadhenna Saranjaramaai paaivadhenna Pennae nee thazhuvudhal pol Perinbam tharuvadhenna
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தண்ணீர் சுடுவதென்ன தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன ஆண் : தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன பெண் : பொன் மேனி பார்த்ததென்ன பூவாடை கொள்வதென்ன பொன் மேனி பார்த்ததென்ன பூவாடை கொள்வதென்ன தன்னைத் தான் மறந்ததிலே தண்ணீரும் சுடுவதென்ன பெண் : பொன் மேனி பார்த்ததென்ன பூவாடை கொள்வதென்ன தன்னைத் தான் மறந்ததிலே தண்ணீரும் சுடுவதென்ன ஆண் : அங்கிருந்து ஆடி வந்து அலைகள் சொல்லும் சேதி என்ன அங்கிருந்து ஆடி வந்து அலைகள் சொல்லும் சேதி என்ன வெள்ளி கெண்டை மீனைப் போலே துள்ளும் கண்கள் சொல்வதென்ன துள்ளும் கண்கள் சொல்வதென்ன பெண் : சொன்ன பின்னும் கேள்வி என்ன துருவித் துருவி கேட்பதென்ன சொன்ன பின்னும் கேள்வி என்ன துருவித் துருவி கேட்பதென்ன முன்னும் பின்னும் பார்ப்பதென்ன முத்தையா உன் வேகம் என்ன முத்தையா உன் வேகம் என்ன குழு : ......................................... ஆண் : தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன ஆண் : மாலை வெயில் வண்ணம் போலே மஞ்சள் பூசும் கோலம் என்ன மாலை வெயில் வண்ணம் போலே மஞ்சள் பூசும் கோலம் என்ன மஞ்சளோடு சேர்ந்து எந்தன் நெஞ்சம் போடும் தாளம் என்ன நெஞ்சம் போடும் தாளம் என்ன பெண் : அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சி போவதென்ன அந்த நாளைக் காணும் முன்னே அம்மம்மா ஏக்கம் என்ன அம்மம்மா ஏக்கம் என்ன குழு : ......................................... ஆண் : தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன
Song information
Singers: P. Susheela and T. M . Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Chithi (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and T. M . Soundararajan
- Film / album: Chithi
- Composer: M. S. Vishwanathan