Roman script
Singer : Soolamangalam Rajalakshmi Music by : S. M. Subbaiah Naidu Female Part Thalaiyae nee vanangaai Thalaiyae nee vanangaai Thalaimaalai thalaikaninthu Thalaimaalai thalaikaninthu Thalaiyaalae palitherun thalaivanai Thalaiyae nee vanangaai Female Part Kangaal kaan mingaloo Kangaal kaan mingaloo Kadal nanjunda kandandrannai Endoozh veesi nindraadum piraandrannai Kangaal kaan mingaloo Female Part Sevigaazh kaenmingaloo Sevigaazh kaenmingaloo Sivan emmirai sembhavala Eripol maenippiraandriram eppodhum Sevigaazh kaenmingaloo Female Part Mukkae nee muralaai Mudhukaadurai mukkannanai Vakkae nokkiya mangai manaalanai Mukkae nee muralaai Mudhukaadurai mukkannanai Vakkae nokkiya mangai manaalanai Mukkae nee muralaai Female Part Vaayae vaazhthu kandaai Vaayae vaazhthu kandaai Madhayaanai yuriporthu Madhayaanai yuriporthu Peivaazh kattagathodum piraanendrennai Vaayae vaazhthu kandaai
Female Part Nenjae nee ninaiyaai Nenjae nee ninaiyaai Nimir punsadai ninmalanai Manjaadum malai mangai manaalanai Nenjae nee ninaiyaai Nimir punsadai ninmalanai Manjaadum malai mangai manaalanai Nenjae nee ninaiyaai Female Part Kaikaal koopithozhir Kaikaal koopithozhir Kadi maamalar thoovi nindru Paivaai paambarai yaartha paramanai Paivaai paambarai yaartha paramanai Kaikaal koopithozhir Female Part Aakkai yaarpayanenna Arankoyil valam vanthu Pookkaiyaal atti pottriyennadha Ivvyakkkai yaarpayanenna Payan ennaa Female Part Kaalgalaarpayanenna Kaalgalaarpayanenna Karai kandanurai koyil Kola gopura kokararan soozhaa Kaalgalaarpayanenna Karai kandanurai koyil Kola gopura kokararan soozhaa Kaalgalaarpayanenna Female Part Uttraar yaar ularooo Uttraar yaar ularooo Uttraar yaar ularooo Uyir kondu pompozhudhu Kuttraalathurai koothanallaal Namakkuttraar yaar ullaroo
தமிழ்
பாடகி : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா பெண் : தலையே நீ வணங்காய் தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கணிந்து தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்.. பெண் : கண்காள் காண்மின்களோ கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசி நின்றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ.. பெண் : செவிகாள் கேண்மின்களோ செவிகாள் கேண்மின்களோ சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ... பெண் : மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்... பெண் : வாயே வாழ்த்து கண்டாய் வாயே வாழ்த்து கண்டாய் மதயானை யுரிபோர்த்து மதயானை யுரிபோர்த்து பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய்.... பெண் : நெஞ்சே நீ நினையாய் நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்.. பெண் : கைகாள் கூப்பித்தொழீர் கைகாள் கூப்பித்தொழீர் கடிமாமலர் தூவி நின்று கடிமாமலர் தூவி நின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர்.... பெண் : ஆக்கை யாற்பயனென் அரன்கோயில் வலம் வந்து பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாத இவ்வாக்கை யாற்பயனென் பயன் என்ன பெண் : கால்க ளாற்பயனென கால்க ளாற்பயனென கறைக் கண்டனுறை கோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென கறைக் கண்டனுறை கோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென பெண் : உற்றார் ராருளரோ உற்றார் ராருளரோ உற்றார் ராருளரோ உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றார் ஆருளரோ.......
Song information
Singer: Soolamangalam Rajalakshmi
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Sundara Murthy Nayanar (1967) · Singer: Soolamangalam Rajalakshmi · Lyricist: Thirunavukkarasar · Music: S. M. Subbaiah Naidu
Explore this song
- Singer: Soolamangalam Rajalakshmi
- Film / album: Sundara Murthy Nayanar
- Composer: S. M. Subbaiah Naidu