Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Female Part

Vaazha vandhom vandha selvathilae

Anbu marandhadhamma avar ullathilae

Vaazha vandhom vandha selvathilae

Anbu marandhadhamma avar ullathilae

Female Part

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Female Part

Padupattom andru pasithirundhom

Andha pasiyilum pasathai anaithirundhom

Verupattu vaazhndhadhillai

Indru vilagiyum kalangiyum vaazhugindrom

Female Part

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Female Part

Manadhiae oru thunbam endraal

Mananthavaridam thaan naan uraippen

Avaridmae thuyaram endraal naan

Evaridam poyi adhai eduthuraippen

Female Part

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

Vaazha vandhom vandha selvathilae

Anbu marandhadhamma avar ullathilae

Female Part

Thaazhndhirundhom oru kaalathilae

Andru serndhirundhom mana kolathilae

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

பெண் : வாழ வந்தோம் வந்த செல்வத்திலே

அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....

வாழ வந்தோம் வந்த செல்வத்திலே

அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....

பெண் : தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

பெண் : பாடுபட்டோம் அன்று பசித்திருந்தோம்

அந்த பசியிலும் பாசத்தை அணைத்திருந்தோம்

வேறுபட்டு வாழ்ந்ததில்லை

இன்று விலகியும் கலங்கியும் வாழுகின்றோம்...

பெண் : தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

பெண் : மனதினிலே ஒரு துன்பம் என்றால்

மணந்தவரிடம்தான் நான் உரைப்பேன்

அவரிடமே துயரமென்றால் நான்

எவரிடம் போய் அதை எடுத்துரைப்பேன்

பெண் : தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

வாழ வந்தோம் வந்த செல்வத்திலே

அன்பு மறந்ததம்மா அவர் உள்ளத்திலே....

பெண் : தாழ்த்திருந்தோம் ஒரு காலத்திலே

அன்று சேர்ந்திருந்தோம் மணக் கோலத்திலே

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Vilaiyattu Pillai (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song