Roman script
Singer : Hari Charan Music by : Ilayaraja Male Part Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil Oru nodi unai naan marandhadhum undo Nee endhan nenjai neengiyadhundo Sinnanchiru mazhalaiyaaga Ippodhendhan kaiyil vandhaai Male Part Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil Male Part Chinna chinna indha chella kilikkoru Kuttiyammaa endru paeru vaippen Male Part Vanna vanna chinna pinju kazhuttukku Thanga changiliyai soottiduven Male Part Vazhi theriyaamal vaadiya enakku Vizhigalai thirandha vidi velli neeyae Thathi varum kiliyae muthu mani chudarae Vittu vilagaadha nenjin uyir moochae Ennai oru manidhanaakka Yaeno endhan kaiyil vandhaai Male Part Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil Male Part Sitham kalangiya pithan ennai thaedi Kitta vandhadhenna muthu kodi Male Part Sutri sutri vandha paadhaiyai maattrida Pattri pidithadhu paasa kodi Male Part Thadam theriyaamal thani vazhi ponen Thari kettu naanum thanai marandhirundhen Sudaroliyaaga en manam nirandhaai Nilavoliyaaga nimmadhi thandhaai Ini endha ulagam ellaam Neeyae neeyae chella kutti Male Part Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil Oru nodi unai naan marandhadhum undo Nee endhan nenjai neengiyadhundo Sinnanchiru mazhalaiyaaga Ippodhendhan kaiyil vandhaai Male Part Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil
தமிழ்
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ சின்னஞ்சிறு மழலையாக இப்போதெந்தன் கையில் வந்தாய் ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் ஆண் : சின்னச் சின்ன இந்த செல்லக் கிளிக்கொரு குட்டியம்மா என்று பேரு வைப்பேன் ஆண் : வண்ண வண்ணச் சின்ன பிஞ்சு கழுத்துக்கு தங்கச் சங்கிலியைச் சூட்டிடுவேன் ஆண் : வழி தெரியாமல் வாடிய எனக்கு விழிகளை திறந்த விடி வெள்ளி நீயே தத்தி வரும் கிளியே முத்து மணிச் சுடரே விட்டு விலகாத நெஞ்சின் உயிர் மூச்சே என்னை ஒரு மனிதனாக்க ஏனோ எந்தன் கையில் வந்தாய் ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் ஆண் : சித்தம் கலங்கிய பித்தன் என்னைத் தேடி கிட்ட வந்ததென்ன முத்துக் கொடி ஆண் : சுற்றிச் சுற்றி வந்த பாதையை மாற்றிட பற்றிப் பிடித்தது பாசக் கொடி ஆண் : தடம் தெரியாமல் தனி வழி போனேன் தறி கெட்டு நானும் தனை மறந்திருந்தேன் சுடரொளியாக என் மனம் நிறைந்தாய் நிலவொளியாக நிம்மதி தந்தாய் இனி எந்தன் உலகம் எல்லாம் நீயே நீயே செல்லக் குட்டி ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ சின்னஞ்சிறு மழலையாக இப்போதெந்தன் கையில் வந்தாய் ஆண் : தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்...
Song information
Singer: Hari Charan
Music by: Ilayaraja
Release information: From Oru Oorla (2014) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Hari Charan
- Film / album: Oru Oorla
- Composer: Ilayaraja