Roman script
Singers : K.J. Yesudas and P. Susheela Music by : Ilayaraja Male Part Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam… Male Part Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu Male Part Penn ennum veetil Nee seidha yaagam Kan moodi paarthen Enghum inbam Female Part Anbennum aatril Neeraadum neram Anghangal yaavum Innum ennum Male Part Indraikum endraikum Nee enthan pakkathil Female Part Inbathai varnikkum Ennullam sorghathil Male Part Melliya noolidai vaadiyathae Manmadha kaaviyam moodiyathae Male & Female : Alliyum killiyum aayiram aasaigal Anbennum keerthanai paadiyathae.. Male Part Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam… Male Part Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu Male Part Thaai thantha paasam Thanthai un veeram Sei kolla vendum anbae anbae Female Part Kaalangal pottrum Kaithanthu kaakkum En pillai thannai inghae inghae Male Part Veetukkum naatukkum Naan paadum paatukkum Female Part Ethikkum thithikkum En inba kootukkum Male Part En magan kaaviya naayaganae En uyir desathu kaavalanae Male & Female : Vaadiya boomiyil kaarmugilaai Mazhai thoovidum Maanudan en maganae… Male Part Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam… Male Part Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு ஆண் : பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம் கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம் பெண் : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம் அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும் ஆண் : இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில் பெண் : இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில் ஆண் : மெல்லிய நூலிடை வாடியதே மன்மத காவியம் மூடியதே ஆண் & பெண் : அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பென்னும் கீர்த்தனை பாடியதே ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு ஆண் : தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே பெண் : காலங்கள் போற்றும் கைதந்து காக்கும் என் பிள்ளை தன்னை இங்கே இங்கே ஆண் : வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும் பெண் : எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும் ஆண் : என் மகன் காவிய நாயகனே என் உயிர் தேசத்து காவலனே ஆண் & பெண் : வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் மானுடன் என் மகனே ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
Song details
Singers: K.J. Yesudas and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Poonthotta Kaavalkaaran (1988) · Lyricist: Gangai Amaran
- Singer: K.J. Yesudas and P. Susheela
- Film / album: Poonthotta Kaavalkaaran
- Composer: Ilayaraja