Roman script

Singers : Uma Ramanan and Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Thaanaanaenae…..thanaanaa…..thaanaanaanaa….

Female Part

Sevvarali thottaththilae unna nenachchu

Thaedikkittu paaduthaiyyaa intha manasu

Akkam pakkam yaarumillae aalunga aravamilla

Suththum muththum paakkayilae thudippum adanguthilla

Female Part

Sevvarali thottaththilae unna nenachchu

Thaedikkittu paaduthaiyyaa intha manasu

Male Part

Kottukira aruviyilae kulikkira kuruvigalae

Pattudambu nanaiyaiyilae pasikkuthu manasinilae

Ponnudamba paakkaiyilae bodhaiyum theeravilla

Annamae…ae….

Female Part

Vekkamathu ungalukkilla

Vekkam maranthaa pombala illa

Aasaiya solla nenachchen

Sollaamaththaan vittaenae

Female Part

Sevvarali thottaththilae unna nenachchu

Thaedikkittu paaduthaiyyaa intha manasu

Male Part

Ailaesaa…..ailaesaa…

Chorus : Hoyaiyaa hoyaiyaa

Male : Ailaesaa…..ailaesaa…

Chorus : Hoyaiyaa hoyaiyaa

Male Part

Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa

Vaadapattu ninnaalammaa vaasam patta poovaattam

Manasula kondaattam malarura sendaattam

Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa

Female Part

Onnukkonnu oravirunthaa

Nenukkoru sogamirukkum

Sonthaththilae palamirunthaa

Sorkkaththilum idamirukkum

Unnaivida yaarumilla otturavu thevaiyilla

Ennaiyya…..aa….

Male Part

Ennamo solla nenachchen

Enna thottathum solla maranthaen

Enna enna ennamirukko

Ellaaththilum needhaanae….

Female Part

Sevvarali thottaththilae unna nenachchu

Male : Haan

Female : Thaedikkittu paaduthaiyyaa intha manasu

Male Part

Akkam pakkam yaarumillae aalunga aravamilla

Suththum muththum paakkayilae thudippum adanguthilla

Male Part

Sevvarali thottaththilae unna nenachchu

Thaedikkittu paaduthaiyyaa intha manasu…

தமிழ்

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தானானேனே....தனானா....தானானானா........

பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு

தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல

சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல

பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு.......

தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே

பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே

பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல

அன்னமே........ஏ......

பெண் : வெக்கமது உங்களுக்கில்ல.......

வெக்கம் மறந்தா பொம்பள இல்ல

ஆசைய சொல்ல நெனச்சேன்

சொல்லாமத்தான் விட்டேனே

ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு

தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு........

ஆண் : ஐலேசா......ஐலேசா......

குழு : ஹோயய்யா ஹோயய்யா

ஆண் : ஐலேசா......ஐலேசா......

குழு : ஹோயய்யா ஹோயய்யா

ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா

வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்

மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்

ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா...

பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா

நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்

சொந்தத்திலே பலமிருந்தா

சொர்க்கத்திலும் இடமிருக்கும்

உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல

என்னய்யா.......ஆ.....

ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன்

என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்

என்ன என்ன எண்ணமிருக்கோ

எல்லாத்திலும் நீதானே..........

பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு

ஆண் : ஹான்

பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு.......

ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல

சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல

ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு.......

தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

Song information

Singers: Uma Ramanan and Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Bhagavathipuram Railway Gate (1983) · Lyricist: Gangai Amaran

Explore this song