Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Senjaandhu kuzhambaalae

Mayil thogai iragaalae

Sengaanthal viral meedhu thozhi

Female Part

Azhagaaga nalungittu

Amarndhaalae ilanchittu

Kalyaana thirukkolam vaazhi

Female Part

Azhagaana manavaalan

Avan kooda nedungaalam

Nizhalaaga nadai podu neeyae

Female Part

Aandondru thavaraamal

Adibaaram kuraiyaamal

Pala selvam pera pogum thaayae

Female Part

Innaalil valaikaappu

Ellorkkum varaverppu

Ezhaachu sool konda maasam

Female Part

Ponnaana kai kondu

Pozhudhodu thaalaatta

Oru pillai vara pogum neram

தமிழ்

பாடகி : கே. எஸ் சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : செஞ்சாந்துக் குழம்பாலே

மயில் தோகை இறகாலே

செங்காந்தள் விரல் மீது தோழி

பெண் : அழகாக நலங்கிட்டு

அமர்ந்தாளே இளஞ்சிட்டு

கல்யாணத் திருக்கோலம் வாழி

பெண் :அழகான மணவாளன்

அவன் கூட நெடுங்காலம்

நிழலாக நடை போடும் நீயே

பெண் : ஆண்டொன்று தவறாமல்

அடிபாரம் குறையாமல்

பல செல்வம் பெறப்போகும் தாயே

பெண் : இந்நாளில் வளைகாப்பு

எல்லோர்க்கும் வரவேற்பு

ஏழாச்சு சூல் கொண்ட மாசம்

பெண் : பொன்னான கை கொண்டு

பொழுதோடு தாலாட்ட

ஒரு பிள்ளை வரப்போகும் நேரம்

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Puthu Paatu (1990) · Lyricist: Vaali

Explore this song