Roman script
Singer : T. M. Soundararajan Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Male Part Seitha paavam theeruthadaa….aa….aa…. Seitha paavam theeruthadaa sivagurunaathaa Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa Male Part Azhagaana poi vithaithaen sivagurunaathaa Indru aruvadaiyai nadaththukindraen sivagurunaathaa Munpuraththil potta vithai sivagurunaathaa Indru mudhugu pakkam vilaiyuthadaa sivagurunaathaa Male Part Seitha paavam theeruthadaa sivagurunaathaa Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa Male Part Thavaraanalum vaazhvammaa Adhu thalaivan illaamal yaedhammaa Thalaivan enbavan kallaanaalum Thazhuvi kolvathu thamizhammaa….. Thazhuvi kolvathu thamizhammaa…..aa…aa…. Male Part Vazhakkai thoduththathum neeyammaa Angu vaatham purivathum neeyammaa Unakkae neethaan edhiri endraal Ingu udhavikku varuvathu yaarammaa…. Udhavikku varuvathu yaarammaa….aa….aa…. Male Part Seitha paavam theeruthadaa sivagurunaathaa Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : செய்த பாவம் தீருதடா...ஆ....ஆ.... செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா ஆண் : அழகான பொய் விதைத்தேன் சிவகுருனாதா இன்று அறுவடையை நடத்துகின்றேன் சிவகுருனாதா முன்புறத்தில் போட்ட விதை சிவகுருனாதா இன்று முதுகு பக்கம் விளையுதடா சிவகுருனாதா ஆண் : செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா ஆண் : தவறானாலும் வாழ்வம்மா அது தலைவன் இல்லாமல் ஏதம்மா தலைவன் என்பவன் கல்லானாலும் தழுவிக் கொள்வது தமிழம்மா...... தழுவிக் கொள்வது தமிழம்மா......ஆ...ஆ... ஆண் : வழக்கை தொடுத்ததும் நீயம்மா அங்கு வாதம் புரிவதும் நீயம்மா உனக்கே நீதான் எதிரி என்றால் இங்கு உதவிக்கு வருவது யாரம்மா....... உதவிக்கு வருவது யாரம்மா.......ஆ...ஆ... ஆண் : செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா ஆண் : இடம் இல்லாத மனிதனுக்கு இறைவனின் வீடு அங்கு இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு...... ஆண் : செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா.... சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Avasara Kalyanam (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Avasara Kalyanam
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan