Roman script

Singer : K. J. Yesudas

Music by : Chandrabose

Chorus

Aaa…..aaa….aa….aa….aa….

Male Part

Santhosham kaanaatha vaazhvundaa

Sangeetham paadaatha aarunudaa

Oru thunbam vanthaal adhai inbam endru

Enni vaazhnthuvittaal

Male Part

Santhosham kaanaatha vaazhvundaa

Sangeetham paadaatha aarunudaa….aa….

Chorus

Aaa…..aaa….aa….aa….aa….

Male Part

Thennaiyin keetru vizhavillai endraal

Thennaikku endrum valarchchi illai

Thangaththai theeyil sudavillai endraal

Mangaiyar sooda nagaiyum illai

Male Part

Pirappathil kooda thuyar irukkum

Penmaikku pavam sumai irukkum

Vali vanthu thaanae vazhi pirakkum

Male Part

Santhosham kaanaatha vaazhvundaa

Chorus

………………..

Male Part

Paasangal pothum paarvaigal pothum

Paalaiyil neerum suranthu varum

Punnagai pothum poo mozhi pothum

Porgalum kooda mudinthuvidum

Male Part

Paadhaiyai anbae thiranthu vidum

Paaraiyum pazhamaai kaninthuvidum

Vaazhkkaiyin aazham vilangividum

Male Part

Santhosham kaanaatha vaazhvundaa

Sangeetham paadaatha aarunudaa

Oru thunbam vanthaal adhai inbam endru

Enni vaazhnthuvittaal

Male Part

Santhosham kaanaatha vaazhvundaa

Sangeetham paadaatha aarunudaa….aa….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ....

ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

சங்கீதம் பாடாத ஆறுண்டா

ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று

எண்ணி வாழ்ந்துவிட்டால்

ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

சங்கீதம் பாடாத ஆறுண்டா....ஆ....

குழு : ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ....ஆ....

ஆண் : தென்னையின் கீற்று விழவில்லை என்றால்

தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை

தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்

மங்கையர் சூட நகையும் இல்லை

ஆண் : பிறப்பதில் கூட துயர் இருக்கும்

பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும்

வலி வந்து தானே வழி பிறக்கும்

ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

குழு : ...........................

ஆண் : பாசங்கள் போதும் பார்வைகள் போதும்

பாலையில் நீரும் சுரந்து வரும்

புன்னகை போதும் பூ மொழி போதும்

போர்களும் கூட முடிந்துவிடும்

ஆண் : பாதையை அன்பே திறந்துவிடும்

பாறையும் பழமாய் கனிந்துவிடும்

வாழ்க்கையின் ஆழம் விளங்கிவிடும்

ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

சங்கீதம் பாடாத ஆறுண்டா

ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று

எண்ணி வாழ்ந்துவிட்டால்

ஆண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

சங்கீதம் பாடாத ஆறுண்டா.....ஆ.....

Song information

Singer: K. J. Yesudas

Music by: Chandrabose

Release information: From Vasanthi (1988) · Lyricist: Vairamuthu

Explore this song