Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Saathi ennum kodumai

Intha naattai endru vidumo

Veedhikku veedhi vanthu

Pethai uyir kondu sellumo

Male Part

Aadhiyil illaatha saathiyum

Paadhiyil vanthathenna thollaiyae

Saathi ennum peyai oottidum

Saththiya poosaari ingillaiyae

Male Part

Saathi ennum kodumai

Intha naattai endru vidumo

Veedhikku veedhi vanthu

Pethai uyir kondu sellumo

Male Part

Unnaiyum ennaiyum pettrathu

Annai thanthai saadhi alla

Unna urangida kaappathu

Mann magalae saadhi alla

Male Part

Nanmaiyum unmaiyum

Niththamum saaguthu saathiyinaal

Anbu panbu enum narkunam

Veguthu saathiyinaal

Male Part

Kaatru ennum saadhi

Thee ennum saadhiyai theendaavidil

Nilam ennum saadhiyum

Neer ennum saadhiyai theendaavidil

Neeyum naanum illai

Mannil uyirum illai nyaana pennae

Male Part

{Saathi ennum kodumai

Intha naattai endru vidumo

Veedhikku veedhi vanthu

Pethai uyir kondu sellumo} (2)

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சாதி என்னும் கொடுமை

இந்த நாட்டை என்று விடுமோ

வீதிக்கு வீதி வந்து

பேதை உயிர் கொண்டு செல்லுமோ

ஆண் : ஆதியில் இல்லாத சாதியும்

பாதியில் வந்ததென்ன தொல்லையே

சாதி என்னும் பேயை ஓட்டிடும்

சத்தியப் பூசாரி இங்கில்லையே.....

ஆண் : சாதி என்னும் கொடுமை

இந்த நாட்டை என்று விடுமோ

வீதிக்கு வீதி வந்து

பேதை உயிர் கொண்டு செல்லுமோ

ஆண் : உன்னையும் என்னையும் பெற்றது

அன்னை தந்தை சாதி அல்ல

உண்ண உறங்கிட காப்பது

மண் மகளே சாதி அல்ல

ஆண் : நன்மையும் உண்மையும்

நித்தமும் சாகுது சாதியினால்

அன்பு பண்பு எனும் நற்குணம்

வேகுது சாதியினால்

ஆண் : காற்று என்னும் சாதி

தீ என்னும் சாதியை தீண்டாவிடில்

நிலம் என்னும் சாதியும்

நீர் என்னும் சாதியை தீண்டாவிடில்

நீயும் நானும் இல்லை

மண்ணில் உயிரும் இல்லை ஞானப் பெண்ணே

ஆண் : {சாதி என்னும் கொடுமை

இந்த நாட்டை என்று விடுமோ

வீதிக்கு வீதி வந்து

பேதை உயிர் கொண்டு செல்லுமோ} (2)

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Thirunelveli (2000) · Lyricist: Poovai Senguttavan

Explore this song