Roman script
Singer : Bhanumathi Music by : R. Sudharsanam Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female Part Kaaikkaadha marathadiyil Thaenaaru paayudhadaa… Kanindhu vitta chinna maram Kanneeril aadudhadaa Kanneeril aadudhadaa Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female Part Pettredukka manam irundhum Pillai kani illai Pettredutha mara kilaikku Mattra sugam illai Female Part Pettredukka manam irundhum Pillai kani illai Pettredutha mara kilaikku Mattra sugam illai Female Part Sutramennum paravai ellaam Kudi irukkum veettil Thottil katti thaalaattum Peru mattum illai Peru mattum illai Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female Part Vendum endru ketpavarkku Illai illai enbaar Veruppavarkkum maruppavarkkum Alli alli tharuvaar Female Part Aandavanaar thiruvullaththai Yaar arindhaar kannae Yaar vayittril yaar pirappaar Yaararivaar kannae Yaararivaar kannae Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru
தமிழ்
பாடகி : பானுமதி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா.... கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா கண்ணீரில் வாடுதடா பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக் கனி இல்லை பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை பெண் : பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக் கனி இல்லை பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை பெண் : சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில் தொட்டில் கட்டி தாலாட்டும் பேறு மட்டும் இல்லை பேறு மட்டும் இல்லை பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : வேண்டும் என்று கேட்பவர்க்கு இல்லை இல்லை என்பார் வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார் பெண் : ஆண்டவனார் திருவுளத்தை யாரறிந்தார் கண்ணே யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே யார் அறிவார் கண்ணே பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று
Song information
Singer: Bhanumathi
Music by: R. Sudharsanam
Release information: From Annai (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Bhanumathi
- Film / album: Annai
- Composer: R. Sudharsanam