Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : Chandrabose Female Part Pillai thoonga thaalaattu Kannan thoonga en paattu Endhan thookam engo Thoongi ponathoo oo oo oo Pillai thoonga thaalaattu Female Part Kaadhal kolla mannanum illai Kangal thoongumaa Kaaval kolla annanum illai Amaidhi thondrumaa Female Part Uthirnthu pona uravugal ingae Ondru koodumaa Udaindhu pona mann kudam meendum Ondru serumaa Karaigal rendum illamal Nadhiyum nagaruma Kallaana deivangal bathilai sollumaa Male Part Pillai thoonga thaalaattu Thangai thoonga en paattu Kaalam koodum pennae Kangal thoongumaa oo oo oo Pillai thoonga thaalaattu Male Part Iravu maarum pagal vandhu serum Iyarkai sonnadhu Inbam thunbam rendukkum endrum Mudivu ulladhu Male Part Alli thaettra aal illai endru Yaar sonnadhu Anaithu kollum uravugal ellam Arugil ulladhu Imaiyai moodi kollamal vizhiyum azhudhadhu Naanaaga naan maara naalum vandhadhu Male Part Pillai thoonga thaalaattu Thangai thoonga en paattu Kaalam koodum pennae Kangal thoongumaa oo oo oo Pillai thoonga thaalaattu Pillai thoonga thaalaattu
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : பிள்ளை தூங்க தாலாட்டு கண்ணன் தூங்க என் பாட்டு எந்தன் தூக்கம் எங்கோ தூங்கி போனதோ ஓஓஓ பிள்ளை தூங்க தாலாட்டு பெண் : காதல் கொள்ள மன்னனும் இல்லை கண்கள் தூங்குமா காவல் கொள்ள அண்ணனும் இல்லை அமைதி தோன்றுமா பெண் : உதிர்ந்து போன உறவுகள் இங்கே ஒன்று கூடுமா உடைந்து போன மண் குடம் மீண்டும் ஒன்று சேருமா கரைகள் ரெண்டும் இல்லாமல் நதியும் நகருமா கல்லான தெய்வங்கள் பதிலை சொல்லுமா ஆண் : பிள்ளை தூங்க தாலாட்டு தங்கை தூங்க என் பாட்டு காலம் கூடும் பெண்ணே கண்கள் தூங்கம்மா ஓஓஒ பிள்ளை தூங்க தாலாட்டு... ஆண் : இரவு மாறும் பகல் வந்து சேரும் இயற்கை சொன்னது இன்பம் துன்பம் ரெண்டுக்கும் என்றும் முடிவு உள்ளது ஆண் : அள்ளி தேற்ற ஆளில்லை என்று யார் சொன்னது அணைத்து கொள்ளும் உறவுகள் எல்லாம் அருகில் உள்ளது இமையை மூடிக் கொள்ளாமல் விழியும் அழுதது நானாக நான் மாற நாளும் வந்தது... ஆண் : பிள்ளை தூங்க தாலாட்டு தங்கை தூங்க என் பாட்டு காலம் கூடும் பெண்ணே கண்கள் தூங்கம்மா ஓஓஒ பிள்ளை தூங்க தாலாட்டு... பிள்ளை தூங்க தாலாட்டு
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: Chandrabose
Release information: From Pattikattu Thambi (1988) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: Chandrabose
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Pattikattu Thambi
- Composer: Chandrabose