Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Kaal kattu kai kattu

Illaadha pengalukku

Kaadhal illai endraalum

Kaaval ondru vendumammaa

Kaaval ondru vendumammaa

Male Part

Pattu paavaadai engae

Katti vaitha koondhal engae

Pottengae poovum engae

Sollammaa sollammaa

Male Part

Pattu paavaadai engae

Katti vaitha koondhal engae

Pottengae poovum engae

Sollammaa sollammaa

Male Part

Kattazhagai aadai kondu

Sutri vitta kolam enna

Vattamidum kangal rendum

Kotti vitta baavam enna

Penmai ondru aan endru

Maari vandha saedhi enna

Male Part

Pattu paavaadai engae

Katti vaitha koondhal engae

Pottengae poovum engae

Sollammaa sollammaa

Male Part

Kallirukkum mullai mottu

Kanneduthu paarppadhenna

Kannamennum velli thattu

Thulli vandhu ketpadhenna

Thaerodu sirpam vandhu

Oorvalanthaan povadhenna

Male Part

Pattu paavaadai engae

Katti vaitha koondhal engae

Pottengae poovum engae

Sollammaa sollammaa

Male Part

Pennukku pen kaadhal kollum

Kanni indru povadhengae

Munnum pinnum kaaval indri

Thannanthani aavadhengae

Murai sollum maappillai

Yarumindri selvadhengae

Male Part

Pattu paavaadai engae

Katti vaitha koondhal engae

Pottengae poovum engae

Sollammaa sollammaa …sollammaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கால்கட்டு கைகட்டு

இல்லாத பெண்களுக்கு

காதல் இல்லை என்றாலும்

காவல் ஒன்று வேண்டுமம்மா

காவல் ஒன்று வேண்டுமம்மா

ஆண் : பட்டுப் பாவாடை எங்கே

கட்டி வைத்த கூந்தல் எங்கே

பொட்டெங்கே பூவும் எங்கே

சொல்லம்மா.......சொல்லம்மா........

ஆண் : பட்டுப் பாவாடை எங்கே

கட்டி வைத்த கூந்தல் எங்கே

பொட்டெங்கே பூவும் எங்கே

சொல்லம்மா.......சொல்லம்மா........

ஆண் : கட்டழகை ஆடை கொண்டு

சுற்றி விட்ட கோலம் என்ன

வட்டமிடும் கண்கள் ரெண்டும்

கொட்டிவிட்ட பாவம் என்ன

பெண்மை ஒன்று ஆண் என்று

மாறி வந்த சேதி என்ன

ஆண் : பட்டுப் பாவாடை எங்கே

கட்டி வைத்த கூந்தல் எங்கே

பொட்டெங்கே பூவும் எங்கே

சொல்லம்மா.......சொல்லம்மா........

ஆண் : கள்ளிலிருக்கும் முல்லை மொட்டு

கண்ணெடுத்து பார்ப்பதென்ன

கன்னமென்னும் வெள்ளி தட்டு

துள்ளி வந்து கேட்பதென்ன

தேரோடு சிற்பம் வந்து

ஊர்வலந்தான் போவதென்ன

ஆண் : பட்டுப் பாவாடை எங்கே

கட்டி வைத்த கூந்தல் எங்கே

பொட்டெங்கே பூவும் எங்கே

சொல்லம்மா.......சொல்லம்மா........

ஆண் : பெண்ணுக்கு பெண் காதல் கொள்ளும்

கன்னி இன்று போவதெங்கே

முன்னும் பின்னும் காவல் இன்றி

தன்னந்தனி ஆவதெங்கே

குறை சொல்லும் மாப்பிள்ளை

யாரும் இன்றி செல்வதெங்கே

ஆண் : பட்டுப் பாவாடை எங்கே

கட்டி வைத்த கூந்தல் எங்கே

பொட்டெங்கே பூவும் எங்கே

சொல்லம்மா.......சொல்லம்மா........சொல்லம்மா........

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Parakkum Paavai (1966) · Lyricist: Kannadasan

Explore this song