Roman script
Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : Viswanathan Ramamoorthy Lyrics by : Vaali Female Part Paruvathil konjam uruvathil konjam Pennukku azhagu varum Paarthathil konjam pazhakkathil konjam Aanukku aasai varum Female Part Paruvathil konjam uruvathil konjam Pennukku azhagu varum Paarthathil konjam pazhakkathil konjam Aanukku aasai varum Female Part Unnai ninaithaeno udal ilaithaeno Ennai koduthaeno nenjai eduthaeno Solla theriyaadho solli puriyaadho Andha kalaithaano indha nilaithaano Female Part Paruvathil konjam uruvathil konjam Pennukku azhagu varum Paarthathil konjam pazhakkathil konjam Aanukku aasai varum Male Part Vizhi malarambu veesiya pinbu Aval thaan arugil vandhaalo Vizhi malarambu veesiya pinbu Aval thaan arugil vandhaalo Thottavan munnae thodarnthaval pinnae Aasaiyil urugi nindraalo Male Part Mangai malarmaeni mannan oru thaeni Indha idhazh kovai innum konjam thevai Kangal padalaamo kaigal thodalaamo Naanam varalaaamo naanum varalaamoo Male Part Poluthoru mayakkam paarvaiyil pirakkum Punnagai thoodhu varum Pagalukku ninaivum iravukku kanavum Poovizhi vaasal varum Female Part Kannena sivapoo Kaniyidhazh veluppoo Idhu than kaadhal enbaaro Kaivalai nazhuvum Ponnudal meliyum Idhudhaan yekkam enbaaro Male Part Thookkathil vizhikkum Mounathil pesum Adhu thaan idhayam enbaaro Kaalathai kazhikkum Kadhalil pizhaikkum Adhuthaan ilamai enbaaro Female Part Maalai iravaagum Male : Mangai uravaagum Female : Maalai poluthaagum Male : Kadhai mudivaagum Female :Mella sugam serum Male : Innum konjam vendum Female : Indru mattumthaano Male : Endrum viduveno Both : Paruvathil konjam uruvathil konjam Pennukku azhagu varum Paarthathil konjam pazhakkathil konjam Aanukku aasai varum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும் பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம் ஆணுக்கு ஆசை வரும்... பெண் : பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும் பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம் ஆணுக்கு ஆசை வரும்.. பெண் : உன்னை நினைத்தேனோ உடல் இளைத்தேனோ என்னைக் கொடுத்தேனோ நெஞ்சை எடுத்தேனோ சொல்லத் தெரியாதோ சொல்லிப் புரியாதோ அந்தக் கலைதானோ இந்த நிலைதானோ... பெண் : பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும் பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம் ஆணுக்கு ஆசை வரும்.. ஆண் : விழி மலரம்பு வீசிய பின்பு அவள்தான் அருகில் வந்தாளோ விழி மலரம்பு வீசிய பின்பு அவள்தான் அருகில் வந்தாளோ தொட்டவன் முன்னே தொடர்ந்தவள் பின்னே ஆசையில் உருகி நின்றாளோ ஆண் : மங்கை மலர்மேனி மன்னன் ஒரு தேனீ இந்த இதழ் கோவை இன்னும் கொஞ்சம் தேவை கண்கள் படலாமோ கைகள் தொடலாமோ நாணம் வரலாமோ நானும் வரலாமோ ஆண் : பொழுதொரு மயக்கம் பார்வையில் பிறக்கும் புன்னகை தூது வரும் பகலுக்கு நினைவும் இரவுக்கு கனவும் பூவிழி வாசல் வரும் பெண் : கண்ணென்ன சிவப்போ கனியிதழ் வெளுப்போ இதுதான் காதல் என்பாரோ கைவளை நழுவும் பொன்னுடல் மெலியும் இதுதான் ஏக்கம் என்பாரோ ஆண் : தூக்கத்தில் விழிக்கும் மௌனத்தில் பேசும் அதுதான் இதயம் என்பாரோ காலத்தை கழிக்கும் காதலில் பிழைக்கும் அதுதான் இளமை என்பாரோ பெண் : மாலை இரவாகும் ஆண் : மங்கை உறவாகும் பெண் : மாலை பொழுதாகும் ஆண் : கதை முடிவாகும் பெண் : மெல்ல சுகம் சேரும் ஆண் : இன்னும் கொஞ்சம் வேண்டும் பெண் : இன்று மட்டும்தானோ ஆண் : என்றும் விடுவேனோ இருவரும் : பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும் பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம் ஆணுக்கு ஆசை வரும்...
Song information
Singers: T. M. Soundarajan and L. R. Eswari
Music by: Viswanathan Ramamoorthy
Lyrics by: Vaali
Release information: From Panam Padaithavan (1965) · Singer: T. M. Soundarajan and L. R. Eswari · Lyricist: Vaali · Music: Viswanathan Ramamoorthy
Explore this song
- Singer: T. M. Soundarajan and L. R. Eswari
- Film / album: Panam Padaithavan
- Composer: Viswanathan Ramamoorthy
- Lyricist: Vaali