Roman script

Singer : Haricharan

Music by : Sam C.S

Male Part

Pachai dhrogangal saagamal

Pallai izhikkum naal thoorum

Etchil sor unnum kaagam pol

Thodarum nilayae setharam

Male Part

Kutram engendru thedaamal

Sattam uranga kudathae

Micham nee endru aanaalum

Adangi odangi vazhaathae

Male Part

Ullavai mothamum thaavendru

Naaigalum peigalum vaalaatta

Nallathai nambi nee por seiyum

Tharunam tharunam

Male Part

Vanjamum nanjamum kai korthu

Nadagam oduthae oorellam

Sathiyam ondru thaan un kaiyil

Gavanam gavanam

Male Part

Aah ooraiyum peraiyum

Vaanga vaa porattum

Theemayai theeyilae

Podavae aarpattam

Male Part

Valainthu nelinthu

Kidakkum varaikkum

Kanakku vazhakku

Theerathae

Male Part

Nimirnthu ezhunthu

Uthaikka thodangu

Etharkkum bayanthu

Oodathae

Male Part

Kollaiyum thollaiyum

Koot endru

Kooni nee poovathu theervillai

Vetrinam kondu nee porittaal

Paniyum jagammae

Male Part

Kallaiyum mannaiyum

Pol ingu

Vazhavae yenginal theengellaam

Unnaiyum mannilae saikindra

Nilamai varumae

Male Part

Kutram engedru thedaamal

Sattam uranga kudathae

Micham nee endru aanaalum

Adangi odangi vazhathae

Male Part

Tadat dadata daa dat aa

Tadat dadata daa dat aa

தமிழ்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் : பச்சை துரோகங்கள் சாகாமல்

பல்லை இழிக்கும் நாள் தூரம்

எச்சில் சோர் உண்ணும் காகம் போல்

தொடரும் நிலையே சேதாரம்

ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல்

சட்டம் உறங்க கூடாதே

மிச்சம் நீ என்று ஆனாலும்

அடங்கி ஒடங்கி வாழாதே

ஆண் : உள்ளவை மொத்தமும் தாவென்று

நாய்களும் பேய்களும் வாலாட்ட

நல்லதை நம்பி நீ போர் செய்யும்

தருணம் தருணம்

ஆண் : வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து

நாடகம் ஓடுதே ஊரெல்லாம்

சத்தியம் ஒன்று தான் உன் கையில்

கவனம் கவனம்

ஆண் : ஆஅ ஊரையும் பேரையும்

வாங்க வா போராட்டம்

தீமையை தீயிலே

போடவே ஆர்பாட்டம்

ஆண் : வளைந்து நெளிந்து

கிடக்கும் வரைக்கும்

கணக்கு வழக்கு

தீராதே

ஆண் : நிமிர்ந்து எழுந்து

உதைக்க தொடங்கு

எதற்கும் பயந்து

ஓடாதே

ஆண் : கொள்ளையும் தொல்லையும்

கூட் என்று

கூனி நீ போவது தீர்வில்லை

வெற்றினம் கொண்டு நீ போரிட்டால்

பணியும் ஜகமே

ஆண் : கல்லையும் மண்ணையும்

போல் இங்கு

வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம்

உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற

நிலைமை வருமே

ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல்

சட்டம் உறங்க கூடாதே

மிச்சம் நீ என்று ஆனாலும்

அடங்கி ஒடங்கி வாழாதே

ஆண் : தடத் தட்ட டா டாட் ஆ

தடத் தட்ட டா டாட் ஆ

Song information

Singer: Haricharan

Music by: Sam C.S

Release information: From Adanga Maru (2018) · Lyricist: Yugabharathi

Explore this song