Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : G. K. Venkatesh Male Part Oru paadalai pala raagathil Unai paarthu paadinen Oru paadalai pala raagathil Unai paarthu paadinen Pala jenmangal unai thedinen Indru neril kangiren Male Part Oru paadalai pala raagathil Unai paarthu paadinen Male Part Endhan paadhaiyil indha devadhai Kural oosai ketkkiren Undhan nyaabagam varum bodhellaam Naan vaanil parakkiren Vizhi moganam tharum mandhiram Vizhi moganam tharum mandhiram Adhu moga kaaviyam Male Part Oru paadalai pala raagathil Unai paarthu paadinen Male Part Pani malligai mana mogini Unai marakka mudiyumoo Ooraayiram kavi paadinum Idhai eedu seiyumoo Ezhulagamum sendru thedinum Ezhulagamum sendru thedinum Idhai kaana koodumoo Male Part Oru paadalai pala raagathil Unai paarthu paadinen Male Part Mazhai kaalangal varum vaelaiyil Unai megam aakkuven Ilam kodaiyil endhan jadaiyil Unai thendral aakkuven En nenjamae oru aalayam En nenjamae oru aalayam Unai deivam aakkuven…. Male Part Oru paadalai pala raagathil Unai paarthu paadinen Pala jenmangal unai thedinen Indru neril kangiren Male Part Oru paadalai pala raagathil Unai paarthu paadinen
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன் ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன் பல ஜென்மங்கள் உனைத் தேடினேன் இன்று நேரில் காண்கிறேன் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன் ஆண் : எந்தன் பாதையில் இந்த தேவதை குரல் ஓசை கேட்கிறேன் உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம் நான் வானில் பறக்கிறேன் விழி மோகனம் தரும் மந்திரம் விழி மோகனம் தரும் மந்திரம் அது மோக காவியம் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன் ஆண் : பனி மல்லிகை மண மோகினி உனை மறக்க முடியுமோ ஓராயிரம் கவி பாடினும் இதை ஈடு செய்யுமோ ஏழுலகமும் சென்று தேடினும் ஏழுலகமும் சென்று தேடினும் இதை காணக் கூடுமோ ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன் ஆண் : மழைக்காலங்கள் வரும் வேளையில் உனை மேகம் ஆக்குவேன் இளம் கோடையில் எந்தன் ஜாடையில் உனைத் தென்றல் ஆக்குவேன் என் நெஞ்சமே ஒரு ஆலயம் என் நெஞ்சமே ஒரு ஆலயம் உனை தெய்வம் ஆக்குவேன் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன் பல ஜென்மங்கள் உனைத் தேடினேன் இன்று நேரில் காண்கிறேன் ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: G. K. Venkatesh
Release information: From Malligai Mogini (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Malligai Mogini
- Composer: G. K. Venkatesh