Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Oru kaadhal dhevadhai Iru kangal poo mazhai Ival raaja vamsamo Radhi dhevi amsamo Female Part Oru kaadhal naayagan Malar maalai soodinaan Iru kannil aayiram Thamizh kavidhai paadinaan Oru kaadhal naayagan Malar maalai soodinaan Male Part Thamizh konda vaigai polae Thirumaeni nadai poda Kaarvendhan naalum Oorgolam pogum Thaer polum idai aada Female Part Pani pola konjum unnai Paarvaigal edai poda Nee konjam thazhuva Naan konjam nazhuva Naanangal thadai poda Male Part Melaadaiyaai naan maaravo Female : Koodaadhena naan kooravo Vaa mella vaa Male Part Oru kaadhal dhevadhai Iru kangal poo mazhai Ival raaja vamsamo Radhi dhevi amsamo Female Part Kadal neelam konda koondhal Kannaa nee poo chooda Madal konda vaazhai Kadan thandha dhegam Mannaa nee kondaada Male Part Maamallan ennai konjum Sivagaami neeyaaga Kaalangal thorum Azhiyaadha kaadhal Sirpangal uruvaaga Female Part Oodal yenum oru naadagam Male : Koodal thanil arangeridum Vaa nerungi vaa Female Part Oru kaadhal naayagan Male : Malar maalai soodinaan Female : Iru kannil aayiram Male : Thamizh kavidhai paadinaan Female Part Lala laalla laalla laa… Lala laalla laalla laa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூ மழை இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ பெண் : ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான் இரு கண்ணில் ஆயிரம் தமிழ்க்கவிதை பாடினான் பெண் : ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான் ஆண் : தமிழ் கொண்ட வைகைப்போ.....லே திருமேனி நடைபோட பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட பெண் : பனிப் போல கொஞ்சும் உன்.....னை பார்வைகள் எடைபோட நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடைபோட ஆண் : மேலாடையாய் நான் மாறவோ பெண் : கூடாதென நான் கூறவோ வா..... மெல்ல வா........ ஆண் : ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூ மழை இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ பெண் : கடல் நீலம் கொண்ட கூ...ந்தல் கண்ணா நீ பூச்சூட மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட ஆண் : மாமல்லன் என்னைக் கொஞ்......சும் சிவகாமி நீயாக காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக பெண் : ஊடல் எனும் ஒரு நாடகம் ஆண் : கூடல் தனில் அரங்கேறிடும் வா...... நெருங்கி வா........ பெண் : ஒரு காதல் நாயகன் ஆண் : மலர் மாலை சூடினான் பெண் : இரு கண்ணில் ஆயிரம் ஆண் : தமிழ்க்கவிதை பாடினான் பெண் : லாலா லால்ல லால்ல லா லாலா லால்ல லால்ல லா
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Sainthadamma Sainthadu (1977) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Sainthadamma Sainthadu
- Composer: Ilayaraja