Roman script
Singer : Sirkazhi Govindarajan
Music by : Ilayaraja
Male Part
Un per sollum pen jenmam
Pithendrum pei endrum
Oor sollum kaaranathai
Yaar solla koodumammaa…
Male Part
{Odugindraal urugugindraal
Edhaiyo thaedugindraal
Edharkko vaadugindraal
Pithaai aadugindraal} (2)
Odugindraal…
Male Part
{Dhatchanin magalaaga
Tharaniyil pirandhaalum
Ratchagan ninaivaaga
Thudithaayammaa} (2)
Female Part
Thaai vazhi saei ennum
Thathuvam mei aaga
Nee ival vaazhvilum nadithaayammaa
Pithaai aadugindraal
Male Part
Odugindraal urugugindraal
Edhaiyo thaedugindraal
Male Part
{Kanni endraanaalum
Pillaiyai pol andru
Than nizhal thaan kandu
Bayandhirundhaal} (2)
Male Part
Yatchini inam polae
Indraval idugaatil
Achamae illaamal ulavugindraal
Pithaai aadugindraal
Male Part
Kattil ulaavi thottil kulaavi
Kaadhal konjidum penmaiyae
Male Part
Pattu noolilum vanna poovilum
Thottu paarkkaiyil menmaiyae
Male Part
Anbu maedaiyil inba naadagam
Aadi nirppaval thanmaiyae
Panbu kettavar paarvai pattadhum
Bathrakaali thaan unmaiyae
Male Part
Poongaatrin gunam maari puyalaaguvaal
Punalaaga nindra magal analaaguvaal
Mogathaip poiyaakki yogathil nirppaal
Mukkannum thee choriya dhikkettum selvaal
Om bathrakaali om ruthrakaali
Gaayathriyaai maari om bathrakaali
Om bathrakaali om bathrakaali om bathrakaali…தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன் பேர் சொல்லும் பெண் ஜென்மம் பித்தென்றும் பேய் என்றும் ஊர் சொல்லும் காரணத்தை யார் சொல்லக் கூடுமம்மா...... ஆண் : ஓடுகின்றாள் உருகுகின்றாள் எதையோ தேடுகின்றாள் எதற்கோ வாடுகின்றாள் பித்தாய் ஆடுகின்றாள் ஆண் : ஓடுகின்றாள் உருகுகின்றாள் எதையோ தேடுகின்றாள் எதற்கோ வாடுகின்றாள் பித்தாய் ஆடுகின்றாள் ஓடுகின்றாள் ஆண் : தட்சணனின் மகளாக தரணியில் பிறந்தாலும் ரட்சகன் நினைவாக துடித்தாய் அம்மா ஆண் : தட்சணனின் மகளாக தரணியில் பிறந்தாலும் ரட்சகன் நினைவாக துடித்தாய் அம்மா பெண் : தாய் வழி சேய் என்னும் தத்துவம் மெய்யாக நீ இவள் வாழ்விலும் நடித்தாயம்மா பித்தாய் ஆடுகின்றாள் ஆண் : ஓடுகின்றாள் உருகுகின்றாள் எதையோ தேடுகின்றாள் ஆண் : கன்னி என்றானாலும் பிள்ளையைப் போல் அன்று தன் நிழல்தான் கண்டு பயந்திருந்தாள் ஆண் : கன்னி என்றானாலும் பிள்ளையைப் போல் அன்று தன் நிழல் தான் கண்டு பயந்திருந்தாள் ஆண் : யட்சினி இனம் போலே இன்றவள் இடுகாட்டில் அச்சமே இல்லாமல் உலவுகின்றாள் பித்தாய் ஆடுகின்றாள்....... ஆண் : கட்டில் உலாவி தொட்டில் குலாவி காதல் கொஞ்சிடும் பெண்மையே ஆண் : பட்டு நூலிலும் வண்ணப்பூவிலும் தொட்டுப் பார்க்கையில் மென்மையே ஆண் : அன்பு மேடையில் இன்ப நாடகம் ஆடி நிற்பவள் தன்மையே பண்பு கெட்டவர் பார்வை பட்டதும் பத்ரகாளிதான் உண்மையே ஆண் : பூங்காற்றின் குணம் மாறி புயலாகுவாள் புனலாக நின்ற மகள் அனலாகுவாள் மோகத்தை பொய்யாக்கி யோகத்தில் நிற்பாள் முக்கண்ணும் தீச் சொரிய திக்கெட்டும் செல்வாள் ஆண் : ஓம் பத்ரகாளி ஓம் ருத்ரகாளி காயத்ரியாய் மாரி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி....
Song information
Singer: Sirkazhi Govindarajan
Music by: Ilayaraja
Release information: From Bhadrakali (1976) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Bhadrakali
- Composer: Ilayaraja