Roman script

Singers : S. P. Balasubrahmanyam, B.Sasirekha and Sunantha

Music by : M. S. Viswanathan

Female Part

Netriyil pottiyittu

Kangalil maiyittu

Vanthathae poonjittu manappen naanendru

Netriyil pottiyittu

Kangalil maiyittu

Vanthathae poonjittu manappen naanendru

Male Part

Edhuvum ariyaa vayathu adiyae padhamaai pazhgu

Puruvam azhagaai ezhuthu enakkithu oru magal aahaahaa

Edhuvum ariyaa vayathu adiyae padhamaai pazhagu

Puruvam azhagaai ezhuthu enakkithu oru magal

Female Part

Netriyil pottiyittu

Kangalil maiyittu

Vanthathae poonjittu manappen naanendru

Female Part

{Pillai mugam paalooruthu

Killai mozhi thaenooruthu mullai poo sirikkum

Mugam vetkkaththaal sivakkum

Vanjikkodi vaa ippadi maappillai kaiyaip pidi

Ennammaa nadippu nenjil inbaththin thudippu}(2)

Male Part

Appavum neeyum poomaalai soodum

Kalyaanam naan parkkavillai

Ippothu paarthaen kanneerai vaarththaen

En nenjil aanantha ellai} (2)

Male Part

Karamum karamum iniya

Naraiyum thiraiyum maraiya

Nalamum valamum niraiya nadanthidum

Thirumanam Aahaahaa

Male Part

Soodaamani sinthaamani

Paalum pazham kondaangadi

Mudhal naal iravu rendu manam pol uravu

Munthaanaiyil kattikanum

Enneramum ottikkanum

Magalae samththu naan sollava unakku

Female Part

Kannaana kannae

Kalyaanae pennae

Ennaalum mangaatha pennae

Nooraandu kaalam nee kaana vendum

Maaraathu senthoorra kolam

Male Part

Ho adadaa kavanam kavanam

alavaa peranum peranum

Ariyaa paruvam paruvam

Anupavam pudhiyathu pudhiyathu

Both : Netriyil pottiyittu

Kangalil maiyittu

Vanthathae poonjittu manappen naanendru…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி.பாலசுப்ரமணியம்,

பி. சசிரேஹா மற்றும் சுனந்த

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நெற்றியில் பொட்டிட்டு

கண்களில் மையிட்டு

வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று

நெற்றியில் பொட்டிட்டு

கண்களில் மையிட்டு

வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று

ஆண் : எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு

புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள் ஆஹாஹா

எதுவும் அறியா வயது அடியே பதமாய் பழகு

புருவம் அழகாய் எழுது எனக்கிது ஒரு மகள்

ஆண் : நெற்றியில் பொட்டிட்டு

கண்களில் மையிட்டு

வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று ...

பெண் : {பிள்ளை முகம் பாலூறுது

கிள்ளை மொழி தேனூறுது முல்லைப்பூ சிரிக்கும்

முகம் வெட்கத்தால் சிவக்கும்

வஞ்சிக்கொடி வா இப்படி மாப்பிள்ளை கையைப்பிடி

என்னம்மா நடிப்பு நெஞ்சில் இன்பத்தின் துடிப்பு} (2)

ஆண் : {அப்பாவும் நீயும் பூமாலை சூடும்

கல்யாணம் நான் பார்க்கவில்லை

இப்போது பார்த்தேன் கண்ணீரை வார்த்தேன்

என் நெஞ்சில் ஆனந்த எல்லை} (2)

ஆண் : கரமும் கரமும் இணைய

நரையும் திரையும் மறைய

நலமும் வளமும் நிறைய நடந்திடும்

திருமணம் ஆஹாஹா

ஆண் : சூடாமணி சிந்தாமணி

பாலும் பழம் கொண்டாங்கடி

முதல் நாள் இரவு ரெண்டு மனம் போல் உறவு

முந்தானையில் கட்டிக்கணும்

எந்நேரமும் ஒட்டிக்கணும்

மகளே சமத்து நான் சொல்லவா உனக்கு

பெண் : கண்ணான கண்ணே

கல்யாணப் பெண்ணே

எந்நாளும் மங்காத பொன்னே

நூறாண்டு காலம் நீ காண வேண்டும்

மாறாது செந்தூரக் கோலம்

ஆண் : ஹோ அடடா கவனம் கவனம்

அளவா பெறணும் பெறணும்

அறியாப் பருவம் பருவம்

அனுபவம் புதியது புதியது

இருவர் : நெற்றியில் பொட்டிட்டு

கண்களில் மையிட்டு

வந்ததே பூஞ்சிட்டு மணப்பெண் நானென்று.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam, B.Sasirekha and Sunantha

Music by: M. S. Viswanathan

Release information: From Dravidan (1989) · Lyricist: Pulamaipithan

Explore this song