Roman script
Singer : M. S. Vishwanathan Music by : M. S. Vishwanathan Male Part Naeraana nedunchaalai Oridathil iru kooraaga pirivadhundu Kooraaga pirindhavai ver idathil vandhu Neraaga inaivathu undu..inaivathu undu Male Part Thaayenum sumaithaangi Thaan sumandha mazhalaiyai Thaalaathu irakki vaithaal Thaalaathu irakki vaithaal Male Part Kaadhalenum sumai thaangi Kanneeril vaazhndhavan Kalippudan yetru kondaan Kalippudan yetru kondaan Male Part Innoruvar nalam kaakkum Thyaagamum seelamum Ellorkkum vaaippadhillai Ellorkkum vaaippadhillai Male Part Izhandhadhor sippiyil Veli vandha muththinai En magal endrazhaithaan Idhayathil ezhudhinaan…aan…. Male Part Izhandhadhor sippiyil Veli vandha muththinai En magal endrazhaithaan En magal endrazhaithaan Idhayathil ezhudhinaan… Ilam selvi vaazhvil or Edhirkaalam ezhudhugindraan Edhirkaalam ezhudhugindraan…aa…hooo…
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு கூறாகப் பிரிந்தவை வேறிடத்தில் வந்து நேராக இணைவதுண்டு ஆண் : தாயெனும் சுமைதாங்கி தான் சுமந்த மழலையை தாளாது இறக்கி வைத்தாள் தாளாது இறக்கி வைத்தாள் ஆண் : காதலெனும் சுமைதாங்கி கண்ணீரில் வாழ்ந்தவன் களிப்புடன் ஏற்றுக் கொண்டான் களிப்புடன் ஏற்றுக் கொண்டான் ஆண் : இன்னொருவர் நலங்காக்கும் தியாகமும் சீலமும் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை ஆண் : இழந்ததோர் சிப்பியில் வெளிவந்த முத்தினை என் மகள் என்றழைத்தான் இதயத்தில் எழுதினான் ஆண் : இழந்ததோர் சிப்பியில் வெளிவந்த முத்தினை என் மகள் என்றழைத்தான் என் மகள் என்றழைத்தான் இதயத்தில் எழுதினான் இளஞ்செல்வி வாழ்விலோர் எதிர்காலம் எழுதுகிறான் எதிர்காலம் எழுதுகிறான்...ஆஆ ..ஓஓ
Song information
Singer: M. S. Vishwanathan
Music by: M. S. Vishwanathan
Release information: From Kaaviya Thalaivi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. S. Vishwanathan
- Film / album: Kaaviya Thalaivi
- Composer: M. S. Vishwanathan