Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male Part

Naeram paurnami naeram

Male Part

Naeram paurnami naeram

Uravu enum thirunadanam

Mella mella iravinil arangaerum

Female Part

Ilanthendral kaattru

Kulir kondu vaattum

Idhayam idandhu thavikka

Male Part

Aahaa inaiyum varaiyil thudikka

Female Part

Oho ilamai kavidhai padikka

Female Part

Naeram paurnami naeram

Male Part

Vaan padaitha maegam

Thaan kodutha neelam

Meen padaitha kannil midhappadhenna jaalam

Female Part

Thaen paditha poovum

Thaedi vandha kaattrum

Naan padaitha inbam ennavendru kaattum

Male Part

Innum innum inba rasam kaana vendum

Female Part

Pen manadhu konjak konja naana vendum

Male Part

Naeram paurnami naeram

Female : Uravu enum

Male : Thirunadanam

Both : Mella mella iravinil arangaerum

Male Part

Thennai konda neerum

Draatchai konda saarum

Unnidathil oorum ennidatthil saerum

Female Part

Poovidhazhgal naangum

Paarthu paarthu yaengum

Paal mughathil thaengum pazharasathai vaangum

Male Part

Micham enna ulladhendru paarkka vendum

Female Part

Acham vetkam vitta pinbu kaetka vendum

Male Part

Naeram paurnami naeram

Female : Uravu enum

Male : Thirunadanam

Both : Mella mella iravinil arangaerum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்

ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்

உறவு என்னும் திரு நடனம்

மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்

உறவு என்னும் திரு நடனம்

மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

பெண் : இளம் தென்றல் காற்று

குளிர் கொண்டு வாட்டும்

இதயம் கிடந்து தவிக்க

ஆண் : ஆஹா இணையும் வரையில் துடிக்க

பெண் : ஓஹோ இளமை கவிதை படிக்க

பெண் : நேரம் பௌர்ணமி நேரம்

உறவு என்னும் திரு நடனம்

மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

ஆண் : வான் படைத்த மேகம்

தான் கொடுத்த நீலம்

வான் படைத்த மேகம்

தான் கொடுத்த நீலம்

மீன் படைத்த கண்ணில்

மிதப்பது என்ன ஜாலம்

பெண் : தேன் படைத்த பூவும்

தேடி வந்த காற்றும்

தேன் படைத்த பூவும்

தேடி வந்த காற்றும்

நான் படைத்த இன்பம்

என்னவென்று காட்டும்

ஆண் : இன்றும் இன்னும்

இன்பரசம் காண வேண்டும்

பெண் : பெண் மனது

கொஞ்ச கொஞ்ச நாண வேண்டும்

ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்

பெண் : உறவு என்னும்

ஆண் : திரு நடனம்

இருவர் : மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

ஆண் : தென்னை கொண்ட நீரும்

திராட்சை கொண்ட சாறும்

தென்னை கொண்ட நீரும்

திராட்சை கொண்ட சாறும்

உன்னிடத்தில் ஊறும் என்னிடத்தில் சேரும்

பெண் : பூவிதழ்கள் நான்கும்

பார்த்து பார்த்து ஏங்கும்

பூவிதழ்கள் நான்கும்

பார்த்து பார்த்து ஏங்கும்

பால் முகத்தில் தேங்கும் பழரசத்தை வாங்கும்

ஆண் : மிச்சம் என்ன உள்ளதென்று

பார்க்க வேண்டும்

பெண் : அச்சம் வெட்கம் விட்ட

பின்பு கேட்க வேண்டும்

ஆண் : நேரம் பௌர்ணமி நேரம்

பெண் : உறவு என்னும்

ஆண் : திரு நடனம்

இருவர் : மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Meenava Nanban (1977) · Lyricist: Vaali

Explore this song