Roman script
Singer : P. Susheela Music by : G. Ramanathan Lyrics by : Kannadasan Female Part Nee illadha ulagathilae Nimmadhi illai Un ninaivilladha idhayathilae Sindhanaiyillai sindhanaiyillai Female Part Kaayum nila vaanil vandhaal Kannurangavillai Kaayum nila vaanil vandhaal Kannurangavillai Unnai kandu konda naal mudhalaai Pennurangavillai Pennurangavillai Female Part Un mugathai paarpadharkkae Kangal vandhadhu Un maarbil saaivadharkkae Udal valarndhadhu Kanni manam unakkenavae Kaathirukkudhu Kanni manam unakkenavae Kaathirukkudhu Indha kaaval thaandi aaval unai Thedi oodudhu thedi oodudhu Female Part Pon vilangai vendumendrae Pootti kondaenae Unnai purindha kooda Siraiyil vandhu maati kondenae Indru naalai endru naalai Endru ennukindrenae Indru naalai endru naalai Endru ennukindrenae Naan endrum undhan elllaiyilae Vandhiduvenae vandhiduvenae Female Part Nee illadha ulagathilae Nimmadhi illai Un ninaivilladha idhayathilae Sindhanaiyillai sindhanaiyillai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை பெண் : காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை..... பெண் : உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது இந்தக் காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது பெண் : பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே உன்னைப் புரிந்த கூட சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே நான் என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே பெண் : நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
Song information
Singer: P. Susheela
Music by: G. Ramanathan
Lyrics by: Kannadasan
Release information: From Deivathin Deivam (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Deivathin Deivam
- Composer: G. Ramanathan
- Lyricist: Kannadasan