Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Andru itta thee Mutturathilae Kondru azhithathu Theeya sakthiyai Indru itta thee Ippurathilae Enna dhaan seiyumo Aadhisakthiyae Male Part Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam Male Part Nee indri naan paada Veredhu keerthanam Ilamai kaalam thodangi Enthan mudhumai kaalam varaiyil Isaikkum geetham thaniyae Indru irupathenna sitrayil Male Part Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam Male Part Thoothu sellavum Seidhi sollavum Naadhi indri naanae Paadugindrathai kaathil ketkumo Poriyil veezhntha maanae Male Part : Kaadhal enbathae Paavam enbathaai Theerpu sonnathu yaaro Thuya kaadhalai thoora thalliyae Theeyai mootuvaaro Male Part Vanji poovum vaazhumoo Illai theeyil vegumoo Marma nyayam pesidum Theivam oomai aagumo Male Part Kanmani ponmani Ingu naan angu nee
Naanum neeyum ondraai Serum neram vaaradho Male Part Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam Male Part Kovil illaiyoo Theivam illaiyoo Konda thunbam theerka Eeram illaiyoo nenjam illaiyoo Nammai ondru serkka Male Part Kaaval nindridum Kadavul yaavumae Kangal kondu paarka Kaalam thaandinaal Yaaridathil naan Kaadhal pitchai ketkka Male Part Theivam kakka vendiyae Kaiyai naanum yendhinen Thikku yedhum indriyae Thunba aatril neendhinen Male Part Innum yen thaamadham Theerka vaa sanjalam Kaakkum kaigal vanthae inage Kanneer thudaikaathoo Male Part Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam Male Part Nee indri naan paada Veredhu keerthanam Ilamai kaalam thodangi Enthan mudhumai kaalam varaiyil Isaikkum geetham thaniyae Indru irupathenna sitrayil Male Part Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்று இட்ட தீ முற்றத்திலே கொன்று அழித்தது தீய சக்தியை இன்று இட்ட தீ இப்புரத்திலே என்ன தான் செய்யுமோ ஆதி சக்தியே ஆண் : நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் ஆண் : நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் இளமை காலம் தொடங்கி எந்தன் முதுமை காலம் வரையில் இசைக்கும் கீதம் தனியே இன்று இருப்பதென்ன சிற்றயில் ஆண் : நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் ஆண் : தூது சொல்லவும் செய்தி சொல்லவும் நாதி இன்றி நானே பாடுகின்றதை காதில் கேட்குமோ பொறியில் வீழ்ந்த மானே ஆண் : காதல் என்பதே பாவம் என்பதாய் தீர்ப்பு சொன்னது யாரோ தூய காதலை தூர தள்ளியே தீயை மூட்டுவாரோ ஆண் : வஞ்சி பூவும் வாழுமோ இல்லை தீயில் வேகுமோ மர்ம நியாயம் பேசிடும் தெய்வம் ஊமை ஆகுமோ ஆண் : கண்மணி பொன்மணி இங்கு நான் அங்கு நீ நானும் நீயும் ஒன்றாய் சேரும் நேரம் வாராதோ ஆண் : நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் ஆண் : கோவில் இல்லையோ தெய்வம் இல்லையோ கொண்ட துன்பம் தீர்க்க ஈரம் இல்லையோ நெஞ்சம் இல்லையோ நம்மை ஒன்று சேர்க்க ஆண் : காவல் நின்றிடும் கடவுள் யாவுமே கண்கள் கொண்டு பார்க்க காலம் தாண்டினால் யாரிடத்தில் நான் காதல் பிட்சை கேட்க ஆண் : தெய்வம் காக்க வேண்டியே கையை நானும் ஏந்தினேன் திக்கு ஏதும் இன்றியே துன்ப ஆற்றில் நீந்தினேன் ஆண் : இன்னும் ஏன் தாமதம் தீர்க்க வா சஞ்சலம் காக்கும் கைகள் வந்தே இங்கே கண்ணீர் துடைக்காதோ ஆண் : நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் ஆண் : நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் இளமை காலம் தொடங்கி எந்தன் முதுமை காலம் வரையில் இசைக்கும் கீதம் தனியே இன்று இருப்பதென்ன சிற்றயில் ஆண் : நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Paattu Vaathiyar (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Paattu Vaathiyar
- Composer: Ilayaraja