Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Maragadha Mani Chorus Im…imum…im…imum… Im…imum…im…imum… Male Part Nee andavana Thaai thandhai thaan unakillaiyae Kanna naan un jaadhi thaan Uravenbadhae enakillaiyae Kanneer enna kanna Ada naan un maamanae Mannil vandhadhaalae Nee mannin maindhanae Male Part Thai bhaashai ariyaadha Pudhu indhiyan Nee endral poiyillaiyae Than jaadhi sollaamal nee vaazhgiraai Un polae oorillaiyae Female Part Im…imum… Male Part Idhazhoram aayiram Siru pookal pookiraai Oru kannaal paarkiraai Odhukeedu ketkiraai Thaalatida mozhiyundu valarvaai piraiye Female Part Im…imum… Male Part Palootida vazhi illai Adhudhaan kuraiyae Undhan sogam sonnaal Yekkam poividum Engal sogam sonnaal Un thookam poividu Female Part Nee andavana Thaai thandhai thaan unakillaiyae Kanna naan un jaadhi thaan Uravenbadhae enakillaiyae Male Part Kanneer enna kanna Ada naan un maamanae Female Part Mannil vandhadhaalae Nee mannin maindhanae Female Part Aaro aaro aaro araaraaro Female Part Aaro aaro aaro areeraaro Female Part Kalaigindra megangal Sabhai koodiyae Vaan veliyai thaalatudhae Female Part Karaigindra pirai aindhu Kai veesiyae Sooriyanai thaalatudhe Male Part Ah…aha…ah… Female Part Mudiyaadha yaathirai Mudigidra velaiyil Muthangal thandhu nee Mullanai selaiyil Female Part Nee enbadhu Em vaazhvil varava selavaa Mul enbadho rojavil Urava pagaya Female Part Kaalam seidha kolam Nee ingae vandhadhu Kanneerodu vandhu Kanneer serndhadhu Female Part Nee andavana Thaai thandhai thaan unakillaiyae Female Part Kanna naan un jaadhi thaan Uravenbadhae enakillaiyae Male Part Kanneer enna kanna Ada naan un maamanae All : Mannil vandhadhaalae Nee mannin maindhanae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மரகதமணி குழு : ம்ம்....ம்ஹும்.....ம்ம்....ம்ஹும்..... ம்ம்....ம்ஹும்.....ம்ம்....ம்ஹும்..... ஆண் : நீ ஆண்டவனா தாய் தந்தைதான் உனக்கில்லையே கண்ணா நான் உன் ஜாதிதான் உறவென்பதே எனக்கில்லையே கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே ஆண் : தாய் பாஷை அறியாத புது இந்தியன் நீ என்றால் பொய்யில்லையே தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய் உன் போலே ஊரில்லையே பெண் : ம்ம்....ம்ஹும்..... ஆண் : இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய் ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய் தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே பெண் : ம்ம்....ம்ஹும்..... ஆண் : பாலூட்டிட வழி இல்லை அதுதான் குறையே உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும் எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும் பெண் : நீ ஆண்டவனா தாய் தந்தைதான் உனக்கில்லையே கண்ணா நான் உன் ஜாதிதான் உறவென்பதே எனக்கில்லையே ஆண் : கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே பெண் : மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே பெண் : ஆரோ ஆரோ ஆரோ ஆராராரோ ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ பெண் : கலைகின்ற மேகங்கள் சபை கூடியே வான் வெளியை தாலாட்டுதே பெண் : கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே சூரியனை தாலாட்டுதே ஆண் : ஆ.....அஹ.....ஆ..... பெண் : முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில் முத்தங்கள் தந்து நீ முள் ஆனாய் சேலையில் பெண் : நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா முள் என்பது ரோஜாவில் உறவா பகையா பெண் : காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது பெண் : நீ ஆண்டவனா தாய் தந்தைதான் உனக்கில்லையே பெண் : கண்ணா நான் உன் ஜாதிதான் உறவென்பதே எனக்கில்லையே ஆண் : கண்ணீர் என்ன கண்ணா அட நான் உன் மாமனே அனைவரும் : மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Maragadha Mani
Release information: From Vaaname Ellai (1992) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Vaaname Ellai
- Composer: Maragadha Mani