Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Dakshinamurthy

Lyrics by : RA. Pazhanisami

Male Part

Nanda en nila…aa…aa….aa….

Nanda nee en nila nila

Naayagan madiyil kanbathu sugamae

Naanam yaeno vaa haa haa…aa….

Male Part

Vizhi meenaadum vizhi mozhi

Thaenaadum mozhi kuzhal

Poovaadum kuzhal ezhil neeyaadum ezhil

Minni varum silaiyil mogana kalaiyae

Vanna vanna mozhiyil vaanavar amuthae

Male Part

Aasai nenjin deivam neeyae

Aadi nirkum deepaam neeyae

Pesugindra veenai neeyae

Kani idhazh amuthinai vazhangida

Aruginil vaa

Male Part

Nanda nee en nila nila

Naayagan madiyil kanbathu sugamae

Naanam yaeno vaa haa haa…aa….

Male Part

Aayiram minnal orr uruvaagi

Aayizhaiyaaga vanthaval neeyae

Aayiram minnal orr uruvaagi

Aayizhaiyaaga vanthaval neeyae

Male Part

Agathiyam pottrum arunthamizh neeyae

Arunthathi polae piranthu vanthaayae

Male Part

Nanda nee en nila nila

Naayagan madiyil kanbathu sugamae

Naanam yaeno vaa haa haa…aa….

Male Part

Aagamam kandu seedhaiyum indru

Raghavan naan endru thirumbi vanthaalo

Aagamam kandu seedhaiyum indru

Raghavan naan endru thirumbi vanthaalo

Male Part

Megathilaadum oorvasi enthan

Mogathilaada irangi vanthaalo

Male Part

Nanda nee en nila nila

Naayagan madiyil kanbathu sugamae

Naanam yaeno vaa haa haa…aa….aa…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ரா. பழனிச்சாமி

ஆண் : நந்தா என் நிலா....ஆ....ஆ...ஆ......

நந்தா நீ என் நிலா நிலா

நாயகன் மடியில் காண்பது சுகமே

நாணம் ஏனோ வா ஹா ஹா...ஆ....

ஆண் : விழி மீனாடும் விழி மொழி

தேனாடும் மொழி குழல்

பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில்

மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே

வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே

ஆண் : ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே

ஆடி நிற்கும் தீபம் நீயே

பேசுகின்ற வீணை நீயே

கனி இதழ் அமுதினை வழங்கிட

அருகினில் வா......

ஆண் : நந்தா நீ என் நிலா நிலா

நாயகன் மடியில் காண்பது சுகமே

நாணம் ஏனோ வா ஹா ஹா.....ஆ....

ஆண் : ஆயிரம் மின்னல் ஒர் உருவாகி

ஆயிழையாக வந்தவள் நீயே

ஆயிரம் மின்னல் ஒர் உருவாகி

ஆயிழையாக வந்தவள் நீயே

ஆண் : அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே

அருந்ததி போலே பிறந்து வந்தாயே

ஆண் : நந்தா நீ என் நிலா நிலா

நாயகன் மடியில் காண்பது சுகமே

நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ

ஆண் : ஆகமம் கண்டு சீதையும் இன்று

ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ

ஆகமம் கண்டு சீதையும் இன்று

ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ

ஆண் : மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்

மோகத்திலாட இறங்கி வந்தாளோ

ஆண் : நந்தா நீ என் நிலா நிலா

நாயகன் மடியில் காண்பது சுகமே

நாணம் ஏனோ வா ஹா ஹா.....ஆ...ஆ...

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: V. Dakshinamurthy

Lyrics by: RA. Pazhanisami

Release information: From Nanda En Nila (1977) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Ra. Pazhanisami · Music: V. Dakshinamurthy

Explore this song