Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Naan vaazha kuruththazhagae Vaatti vachcha ponnazhagae En maalai kazhuththazhagae maththiyaana poovazhagae Thaali nee mudikka thavamaa thavamirunthaen Ola kodukkaamalae oththa vazhi poneegalae Female Part Kodi thuni uduththu koottaththilae ninneenganaa Kodi janam mayangum koodalooru kannu padum Javuli kada adachchu jaadhi sanam vaayadachchu Thaniyaa poreegalae en aasaiyulla ennavarae Aiyyaa mannavarae Female Part Sirichcha mugaththazhagum sevantha odhattazhagum Mayakkum kannazhagum vaaraatha sollazhagum Ulla en mannavarae uththamarae nallavarae Ukkaarntha edaththulaeyae usura maranthavarae Aiyyaa mannavarae Female Part Kunguma pottu vachchaa kurukurunnu paappeegalae Manjathaan naan kulichchaa naathiriyaa nippeegalae Malliyappoo naan mudichchaa mayangi muzhippeegalae Ennaannu pottu vaippaen Eppadiththaan poo mudippaen neenga pona pinnaalae Female Part Yaezhu ooru pannaiyilum unga polae aalaethu Intha mugam paakkaamae naaniruntha naalaethu Thoongaa velakku vachchu thunaikku irunthavarae Thaengaa odachchathu polae sillaa parantheegalae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் வாழக் குருத்தழகே வாட்டி வச்ச பொன்னழகே என் மாலை கழுத்தழகே மத்தியான பூவழகே தாலி நீ முடிக்க தவமா தவமிருந்தேன் ஓல கொடுக்காமலே ஒத்த வழி போனீகளே.. பெண் : கோடி துணி உடுத்தி கூட்டத்திலே நின்னீங்கனா கோடி ஜனம் மயங்கும் கூடலூரு கண்ணு படும் ஜவுளி கட அடச்சு ஜாதி சனம் வாயடச்சு தனியா போறீகளே என் ஆசையுள்ள என்னவரே ஐயா மன்னவரே..... பெண் : சிரிச்ச முகத்தழகும் செவந்த ஓதட்டழகும் மயக்கும் கண்ணழகும் வாராத சொல்லழகும் உள்ள என் மன்னவரே உத்தமரே நல்லவரே உக்கார்ந்த எடத்துலேயே உசுர மறந்தவரே ஐயா மன்னவரே..... பெண் : குங்கும பொட்டு வச்சா குறுகுறுன்னு பாப்பீகளே மஞ்சதான் நான் குளிச்சா மாதிரியா நிப்பீகளே மல்லியப்பூ நான் முடிச்சா மயங்கி முழிப்பீகளே என்னான்னு பொட்டு வைப்பேன் எப்படித்தான் பூ முடிப்பேன் நீங்க போன பின்னாலே.... பெண் : ஏழு ஊரு பண்ணையிலும் உங்க போலே ஆளேது இந்த முகம் பாக்காமே நானிருந்த நாளேது தூங்கா வெளக்கு வச்சு துணைக்கு இருந்தவரே தேங்கா ஒடச்சது போலே சில்லாப் பறந்தீகளே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From En Selvame (1985) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: En Selvame
- Composer: Ilayaraja