Roman script
Singer : Kiruthiga
Music by : Vagu Mazan
Female Part
{Oruvaai vethalaiyae
Iruvaai undakadhai
Thiruvaai marnthaalum
Thinna rusi maranthirumoo?….} (2)
Female Part
{Naakku sevandhavare
Naalezhuthu mandhiriyae
Mookku vedachavare
Munn vazhukkai mannavarae} (2)
Female Part
Koothu mudinjiruchu
Komaripulla edhukkunnu
Paathum paakkama
Paraparannu porreeroo!
Female Part
{Oruvaai vethalaiyae
Iruvaai undakadhai
Thiruvaai marnthaalum
Thinna rusi maranthirumoo?….} (2)
Female Part
Vaikkapor padapukku
Vada iruttu moolaiyila
Akkapor senjakadhai
Aiyyanukku maranthiruchoo?…
Female Part
Savara kathikku
Thappicha kurumudiyil
Mugara urasunadhu
Muzhusathaan maranthiruchoo?….
Female Part
Mottu mottu malligaiya
Mutti mutti thattivittu
Muthu muthu vervai sottu
Mondhakadhai maranthiruchoo?….
Female Part
Vaazhaithoppukkulla
Valavi odachakadhai
Vaazhai maranthirukkum
Valathu kaiyi maranthirumoo?…
Female Part
{Oruvaai vethalaiyae
Iruvaai undakadhai
Thiruvaai marnthaalum
Thinna rusi maranthirumoo?….} (2)
Female Part
Thaenyeri poirundha
Sirikkimava thalamayiru
Penyeri ponadhaiyaa
Pechuvaarthai illama
Female Part
Pulli thaemalukku
Pudhu madippukkum
Karupatti udhatukkum
Karuthakkili alaiyudhappa
Female Part
Aarucharam sangiliyoo
Attigai kekalaiyae
Manja kayithukku
Manasukkulla arikkuthaiyaa
Female Part
Aambalaiga sagavaasam
Aduthoruthi vaara varaikkum
Pombalaiga sagavaasam
Pudhai kaadu poravaraikkum
Female Part
{Oruvaai vethalaiyae
Iruvaai undakadhai
Thiruvaai marnthaalum
Thinna rusi maranthirumoo?….} (2)தமிழ்
பாடகி : கிருத்திகா இசை அமைப்பாளர் : வகு மாலன் பெண் : ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ?...(2) பெண் : நாக்குச் செவந்தவரே நாலெழுத்து மந்திரியே மூக்கு வெடச்சவரே முன்வழுக்கை மன்னவரே ...(2) பெண் : கூத்து முடிஞ்சிருச்சு கொமரிப்புள்ள எதுக்குன்னு பாத்தும் பாக்காமப் பரபரன்னு போறீரோ!.. பெண் : ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ? ...(2) பெண் : வைக்கப் போர்ப் படப்புக்கு வடஇருட்டு மூலையில அக்கப்போர் செஞ்சகதை அய்யனுக்கு மறந்திருச்சோ?... பெண் : சவரக் கத்திக்குத் தப்பிச்ச குறுமுடியில் முகர ஒரசுனது முழுசாத்தான் மறந்திருச்சோ?... பெண் : மொட்டு மொட்டு மல்லிகையை முட்டிமுட்டித் தட்டிவிட்டு முத்துமுத்து வேர்வைச் சொட்டு மோந்தகதை மறந்திருச்சோ?... பெண் : வாழைத் தோப்புக்குள்ள வளவி ஒடச்சகதை வாழை மறந்திருக்கும் வலதுகையி மறந்திருமோ?.... பெண் : ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ? ...(2) பெண் : தேனேறிப் போயிருந்த சிறுக்கிமக தலைமயிரு பேனேறிப் போனதய்யா பேச்சுவார்த்தை இல்லாம பெண் : புள்ளித் தேமலுக்கும் புதுவேட்டி மடிப்புக்கும் கருப்பட்டி ஒதட்டுக்கும் கருத்தகிளி அலையுதய்யா பெண் : ஆறுசரம் சங்கிலியோ அட்டிகையோ கேக்கலையே மஞ்சக் கயித்துக்கு மனசுக்குள்ள அரிக்குதய்யா பெண் : ஆம்பளைக சகவாசம் அடுத்தொருத்தி வாரவரைக்கும் பொம்பளைக சகவாசம் புதைகாடு போறவரைக்கும் பெண் : ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ? ...(2)
Song information
Singer: Kiruthiga
Music by: Vagu Mazan
Release information: From Naatpadu Theral (2021) · Singer: Kiruthiga · Lyricist: Vairamuthu · Music: Vagu Mazan
Explore this song
- Singer: Kiruthiga
- Film / album: Naatpadu Theral
- Composer: Vagu Mazan